4 Nov 2010

ஒரு கொடூர கொலையும் அதை தொடந்த சில சிந்தனைகளும்!!!



கடந்த மூன்று- நாலு நாட்களாக மனதை உலுக்கிய சம்பவமே கோவை பள்ளி குழந்தைகள் கொடூர கொலை!  நாளுக்கு நாள் வரும் செய்தி இது மனித உலகமா என எண்ணம் கொள்ளும் அளவுக்கு சிந்தனை கொள்ள செய்தது.  இதே போன்றே டெல்லியே சேர்ந்த ஆருஷி என்ற சிறுமி கொல்லபட்டபோதும், ஒரு கட்டத்தில் போலிஸ் தந்தையே மகளை கொன்றது போல் மாயதோற்றம் உருவாக்கி பின்பு மீடியா வழியாக ஒரு விவாதமே நிகழ்த்த பட்டு கடைசியாக வேலைக்காரர்களால் கொல்ல பட்டதாக கண்பிடிக்க பட்டது. பெற்றோர்களுக்கு சில அறிவுரைகளை கூறுவதுடன் போலிஸ் தன் வேலையை முடித்து கொள்கின்றது. கோவையில் பாட்டியிடம் விடை பெற்று வாகனத்தில் சென்ற குழந்தைகளே கொல்லபட்டதும்!
கொலைகாரன் கொலையை நடத்திய விதம் காணும் போது பணம் பறிப்பது அல்ல நோக்கம் எனவும் தற்செயல் அல்லாது திட்டமிடபட்டு நிகழ்த்தபடுத்த பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது.  யாருடைய தூண்டுதலோ, அல்லது தொழில் போட்டி, வேறு சில காரணங்களும் உண்டா எனவும் ஆராயபடவேண்டியுள்ளது.  காரணம் கொலைகாரன் ஒரு தடவை கூட பெற்றோரை பணத்திற்கென தொடர்பு கொண்டது போல் தெரியவில்லை. கயிரு, பிளாஸ்டிக் பை,சாணப்பொடி, பால் இவைகள் கருதி வைத்திருந்தது தெரிந்திருக்கின்றது.  கொலையாளியை பாட்டி பார்த்துள்ளதால் கண்டிப்பாக பிடிபடுவோம் என அவனுக்கும் தெரிந்திருக்கும்.  கூட்டாளியை தப்பிக்க வைக்க முயன்று அவன் மட்டும் போலிஸ் கைய்யில் சீக்கிரமாகவே மாட்டியுள்ளான்.  பத்திரிக்கை செய்தி பார்ப்பினும்  நாளுக்கு நாள் புது புதியதாக செய்தி வந்து கொண்டிருக்கின்றது.
பத்திரிக்கை செய்தி கூட கண்டிக்க தக்க விதமாகவே உள்ளது. கொடூரன் கூறியதை எல்லாம் வெளியிட தேவையில்லாததே.  வேறு சில காடனுகளுக்கும் பாடம் நடத்தவா?.  வாசிக்கும் பெற்றோரின் மனம் மேலும் நிலை குலைய செய்யவே இது உதவும் என ஊடகவியிளார்களுக்கு தெரியாதா!!
இதில் சிலவற்றை நாம் வசதியாக மறந்து போகின்றோம். கொலையாளியே உடனே கொலை செய்ய வேண்டும் எனதோன்றினாலும் அவனின் பின் புலன் பெற்றோர், வாழ்ந்த சூழல் ஆராயபட்டால் மேலும் இவ்விதமான காடையனுகளைஅடையாளம் காண வசதியாக இருக்கும். இக்கொலையில் கூட குழந்தை கொல்லபட்ட விதத்தை ஆராய்ந்து செய்திக்கு மேல் செய்தி வெளியிட்டு பெற்றோரின் மனநிலையை குலைக்கும் ஊடகம் கூட ஆக்க பூர்வமான கருத்தையோ செய்தியோ வெளியிட வில்லை.
சாதாரணமான ஒருவனால் இவ்விதம் செய்யவே இயலாது. அவன் பெற்றோர்களால் துண்புறுத்தபட்டு வளரபட்டிருக்க வேண்டும் அல்லது அவனுடைய தாயின் தகாத வாழ்க்கையை கண்டு வளரபட்டவனாக இருக்க வேண்டும் அல்லது குடிகார தந்தையிடம் வளர்ந்தவனாக இருக்க வேண்டும்.  சமீபத்தில் ஒரு அனாதை ஆசிரம் சென்ற போது பெரும் வாரியான குழந்தைகள் பெற்றோர்களின் காமக் களியாட்டத்தால் அனாதர்களாக மாற்றபட்டவர்களே, அல்லது இரண்டு பெரும் வேறு யாருடனும் ஓடிபோனவுடன் இக்குழந்தைகள் அனாதை ஆசிரமத்துக்கு வரப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கையில் பிறந்தது முதல் எதிர்கொள்ளும் இரக்கமற்ற சூழல் வளர்ந்த பின்பு தான் பெறபட்டதே சமூகத்திடம் திருப்பி தரும்போது நம்மை போன்ற சாதாரண மக்களால் எதிர்கொள்ள முடியாமல் போகின்றது.  நியூட்டன் தியரியை பொருத்தி பார்க்க தோன்றுகின்றது.

 
முதலில் கள்ள காதலர்களே தண்டிக்கும் வழியாக மனித விஷங்கள் பூமியில் வருவதயே தடுக்க இயலும். மேலும் குழந்தைளை அனாதர்களாக்கும் பெற்றோரை சட்டத்தால் தண்டிக்காது இது போன்ற கொடூர நிகழ்ச்சிகள் வருவதை தடுக்க இயலாது.
இந்தியாவின் சமூகச் சூழலும் இதற்க்கு காரணம் ஆகின்றது. ஒரு பக்கம் பெரிய மனிதர்கள் என எண்ணும் அதிகாரம் படைத்த வர்கம் மக்களின் இரத்ததை ஊழல் என உறிச்சி குடிக்க படும் போது இதே பார்த்தே பழக்க பட்ட கீழ் எண்ணம் கொண்ட சில மனித மிருகங்கள் தன்னுடைய கொடூரத்தை இவ்விதம் நிகழ்த்துகின்றது.

 
ஒரு பக்கம் பணக்காரர்கள், படித்தவர்கள் ,கலாச்சாரம் முள்ள மக்கள் பெருகுவது போலவே மறுபக்கம் ஒரு பெரும் கூட்டம் மக்கள் மனிதனின் மான்பற்று வாழ்கின்றனர்,வாழதள்ளபடுகின்றனர்.  சமீபத்தில் 'இரக்கம்', 'சமூக நீதி' என்ற பெயரில் திரைப்படங்கள் வழியே பணக்காரர்கள் என்றால் கொடூரமானவர்கள் எனவும் ஏழைகள் பரம சாதுவாகவும், அல்லது அவ்ர்களின் அடாவடித்தனங்களுக்கு நியாயம் கொள்வது போலவும் பல திரைப்படங்களில் காட்டி மோசமான கலாச்சாரத்தை வளர்க்கின்றனர். விஜய் போன்ற முன்னனி நடிகர்கள் நடிக்கும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை பலவிதமாக சித்திரிகரிச்சு இவ்விதமான செயல்களே திரைகளில் காட்டி காட்டி எவ்விதமான கொடூரமன செயலையும் மக்களின் மனதில் ஒன்றுமில்லாததுபோல் பதியவைக்கின்றனர்.
பள்ளி குழந்தைகளுக்கு பேருந்து வசதி தற்போது இல்லை என்பதும் ஒரு பெரும் குறையே. கல்லூரி மாணவர்களுக்கு என அரசு பேருந்துகளே இயங்கும் போது தினம் தினம் பேருந்து பின்னால் ஓடியே களைத்து போய் தங்கள் பள்ளி படிப்பை தொடருகின்றனர். திருநெல்வேலியில் கூட சாப்டர் பள்ளி, சாரா தக்கர் பள்ளி அருகில் இருந்து பள்ளி குழந்தைகள் எவ்விதம் பேருந்து பயணம் செய்கின்றனர் என காணலாம்.
முதலில் எப்போழுதும் எங்கு வேண்டுமானாலும் சாராயம் வாங்கலாம் விற்க்கலாம் என்ற நிலை மாறினாலே நமது சமூகத்தின் பெரிய கலாச் சார சீரளிவை தடுக்கலாம். நெல்லையில் திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்திலே டாஸ்க்கு மார்க்கு கடை உள்ளதை என்ன என சொல்ல!
பலபோதும் குழந்தைகள் கொல்லப்படும்போது கொள்ளும் பரபரப்பு அவர்கள் அரை உயிருடன் தாக்க பட்டு தப்பிக்கும் போது காணபடுவது இல்லை. சமீபத்தில் நெல்லை வண்ணார் பேட்டையில் ஒரு 8 வயது சிறுமி எதிர்  வீட்டு கொடியவனால் சீரளிக்க பட்டாள்.

சட்டங்களையும் கடுமைப்படுத்த வேண்டும். சிறுவர்களிடன் கொடுமையாக நடத்துபவர்களே ஒரு கை, கால் என வெட்டி எடுத்து விட்டால் இவ்விதமான கொடூரமானவர்களே அடையாளம் காணப்படவும் குறைந்த பட்சம் குழைந்தைகளுக்கு எளிதாக தப்பிக்கயாவது இயலும்.

 
என்னுடைய பள்ளித் தோழி 2 வகுப்பு படிக்கும் போது இவ்விதம்மாக ஒருவனால் தாக்க பட்டு தேயிலை தோட்டத்தில் குழிக்குள் உயிருடன் புதைக்க பட்டாள். அவளுடைய உயிரை காப்பாற்ற முடிந்தாலும் 8 வகுப்பு படிக்கும் போதும் அவளுடைய சரீரத்திலுள்ள மனதிலுள்ள தழும்புகள் மறையபடவில்லை. யாருடனும் பேச திராணியற்றவளாக , பதறும் மனதுள்ளவளாக ,பயம் கொண்ட கண்ணுடையளாகவே அவளுடைய வாழ்க்கை இருந்தது.

 
அரசும் காவல் துறையும் மக்களுக்கு தரும் உபதேசத்தை எண்ணி அழுவதா சிரிப்பதா என தெரிய வில்லை. பெற்றோரை பள்ளியில் கொண்டுவிட வேண்டும் என்று கூறுகின்றனர். இரண்டு பெயரும் வேலைக்கு செல்லும் சூழலில் பல வீடுகளில் பெற்றோர்கள் அதிகாலையில் பஸ்ஸை பிடித்து ஓடுகின்றனர். பல வாகன ஓட்டுனர்கள் பல பொழுதும் மிகவும் பொறுப்பாகவே குழந்தைகளே பள்ளிக்கு கொண்டு சென்று கூட்டி வரும் மகத்தான பணியை சிறப்பாகவும் செய்கின்றனர்.

 
மேலும் ராபகலாக மக்களை கண் விழித்து பாது காக்கும் காவல் துறைக்கு இந்த கொலைக்கு காரணமான பொறுப்பு எந்த அளவு உள்ளது எனவும் ஆராய வேண்டியுள்ளது!!!!

9 comments:

  1. அருமையான பதிவு. கொலை காரனது தரப்பு கருத்துக்களையும் அறிந்தால் தான் நமக்கு முழு நிகழ்வும், பின்னணியும் புரியும்.

    ReplyDelete
  2. மிக நல்ல பதிவு. ஏன் இப்படி நடக்கிறது என்பதற்கு விடை தேடுவது கஸ்டம் ஆனால் எப்போதும் ஜாக்கிரதை உணர்வுடன் இருத்தல் அவசியமெனப்படுகிறது எனக்கு.

    ReplyDelete
  3. தேவையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  4. பதில் இடுகைகளுக்கு மிக்க நன்றி, ! இது மேலும் நம்மை ஆக்கபூர்வமான கருத்துரையாடலுக்கு இட்டு செல்கின்றது.

    ReplyDelete
  5. உங்களுடைய பதிவு ஒரு சமசரமான பதிவாக இருக்கிறது.பிரச்சனைக்கு காரணமே முதலாளித்துவ சுரண்டலும்,நுகர்வு கலாச்சாரம்தான் காரணம்.இதை விட்டு என்னனவோ சொல்றிங்க.

    ReplyDelete
  6. நண்பா,
    முதலாளியை விட எத்தனையோ தொழிலாளிகள் மகிழ்ச்சியுடன் தான் வாழ்கின்றனர். மகிழ்ச்சி,நிறைவு,எல்லாமே மனம் சம்பந்தமானது. ஈரமில்லாத மனம் கொண்ட மனிதர்களே இதன் காரணம். சூரயாடபட்டது முதலாளித்துவம், நுகர்வு என ஒன்றும் அறியாத பிஞ்சு மழலைகளே!

    ReplyDelete
  7. சூரயாடபட்டது முதலாளித்துவம், நுகர்வு என ஒன்றும் அறியாத பிஞ்சு மழலைகளே! //

    இந்த கொடூரம் ஒரு மனிதத்தன்னையற்ற செயல்.ஆனால் இந்த நிகழ்வுக்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவம்,ஏழைகள் பாதிக்கப்படும்போது இந்த ஊடகங்கள் எழுதுவதில்லையே.பிறகு முதலாளிக்குழந்தைகளும்,தொழிலாளிக்குழந்தைகளும் ஒன்று கிடையாது.இன்றைக்கு இந்த சம்பவங்கள் பேசப்படுவதற்கு காரணமே,பணம்தான்.நோக்கிய பெண் தொழிலாளி ஒரு முதலாளியின் லாபத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாக கழுத்து அறுக்கப்பட்டு இறக்கப்படும்போதுகூட யாரும் வாயை திறப்பதில்லையே.அப்படியே ஊடகங்கள் அதை பதித்தாளும் முதலாளிக்கு ஆதரவாகதானே போடப்படுகிறது.அந்த சம்பவத்திற்கு இந்த சம்பவத்தை சம்பந்த படுத்துவது என் நோக்கம் அல்ல. பாதிப்பு என்பது முதலாளிக்கு ஏற்படும்போது அது பெரிய அளவில் வெளிக்கொண்டுவரப்படுகிறது. ஆனால் பல கோடி உழைக்கும் மக்களும்,அவர் குழந்தைகளும் பாதிக்கப்படும்போது எல்லாம் ஊமையாகிவிடுகிறது.

    ReplyDelete
  8. தாங்கள் கூறுவது சரியே. நாம் ஒன்றே நினைத்து பார்க்க வேண்டும். வெகு சன ஊடகம் சமூகவியாளர்களிடம் இருந்து முதலாளிகள், அரசியல்வாதிகளின் கைக்கு வந்து விட்டது. வலைப்பதிவுகள் போன்ற நவீன ஊடகம் வழியே நமது செய்திகளை வெளிகொண்டு வர வேண்டிய காலம் வந்து விட்டது!

    ReplyDelete