20 Aug 2011

மனித உணர்வுகள் இல்லாத தமிழ் இன உணர்வாளர்கள் ?


எலி தொல்லை பெரிய தொல்லை பாருங்கோ.  வீட்டில் மட்டுமல்ல வயலிலும் இதன் அட்டகாசம் பயங்கரம் தான் போல்.  சமீபத்தில் தமிழக சட்ட சபையில் தேமுக கட்சியினர் விவசாயிகளுக்கு எலிப் பொறி இனாமாக கொடுக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்திருந்தனர்

கால் நூற்றாண்டு முன்பு, என் வீட்டில் அப்பாவின் நண்பர்கள் குடும்பம் எங்கள் குடும்பம் என 4 குடும்பமாக வேளாங்கண்ணி  கோயிலுக்கு சென்றிருந்தோம். அப்பாவுக்கு வேளாங்கண்ணி போனால் உணவகம் பிடிக்காது எங்களுக்கும் அப்படி தான் ஏன் என்றால் இட்லி தான் வாங்கி சாப்பிட வேண்டும் என கட்டளை இட்டு விடுவார். வெளியூர்காரர்கள் என்றால் ந்நியாயமா பில்லை போட்டிடுவான், கண்டது கடியதும் வாங்கி சாப்பிடாதீங்க  என கூறி அடுப்பு, பானை, கரண்டி எல்லாம் வாடகைக்கு பிடித்து வேளாங்கண்ணியில் இருந்து வரும் வரை மீனும் சோறும் தான். அந்த சிறுபிள்ளை புத்தி இப்போது எனக்கு வேறுவிதமாக என் மகன்களிடமும் வருவது உண்டு.  நாங்கள் ஹோட்டல் சென்றால் எங்கள் மகன்கள்  உணவு அட்டவணயை கையில் எடுக்கும் போதே என்னுள் ஒரு எலி ஓட ஆரம்பித்து விடும். ஒரு போதும் கண்டிராத பெயராக தேடுவார்கள்.  உலகம் எங்கள்  நெல்லையிலும் அடங்குவதால் வாயில் பெயர் வராத அனைத்து உலக- உணவு வகைகளும் இங்கு  கிடைக்கும்.  அதன் விலை தான் கொடுமையானதாக இருக்கும் . பல போதும் சாப்பாடு பில்லை என்னவர் என்னிடம் காட்டுவதில்லை. நானும் பார்க்க விரும்புவதில்லை, பின்பு சாப்பிட்ட ருசி என்னை விட்டு ஓடி மறைந்து  விடும் என்பதால்!

 எலிக்கதைக்கு வருகின்றேன். பாட்டியை வீட்டு காவலுக்கு வைத்து விட்டு வேளான்கண்ணி ஆலயம் சென்றிருந்தோம்.  நடு இரவில் நடப்பது போல் ஒரு சத்தம் கேட்டுள்ளது. பாட்டியும்  பயந்து போய் பக்கத்து வீட்டு வைத்தியரை அழைக்க  அவர் எங்க ஊர் ஆட்களை எல்லாம் அழைத்து கம்பும் தடியுமாக வீடு முழுதும் தேடியுள்ளனர்.  கடைசியில் பார்த்தால் ஒரு பெருச்சாளி தான் வீட்டின் உள்ளில் இருந்து ஓடியுள்ளது.   பின்பு அம்மா கள்ளன் கொள்ளையடித்து போயிருந்தால் கூட இந்த மாதிரி வருத்த பட்டிருக்க மாட்டார்; பாட்டி ஊரை கூட்டி அவமானப்படுத்தி விட்டார்கள் என்று தான் பல நாட்கள் துயரத்தில் இருந்தார்.

எலியை சாவடிப்பது பெரும் பாடு.  எங்கள் கடை எலியின் மாளிகையாக   தான்  இருந்தது.   ஒன்றை கொன்றால் போட்டிக்கு என கூட்டம் கூட்டமாக குட்டி போட்டு வைத்திருக்கும்.  காலில் போடும் ஷூவில் இருந்து சாக்கு, மேஜை அறைகள்என அவை இல்லாது இடமே இல்லை என்றாகி இருந்ததுஒரு பூனை வளர்த்து எலியை பிடிக்கலாம்  என்றால் பூனை தரும் தொல்லை பெரும் தொல்லையாக  இருந்ததுஒரு முறை அப்படி தான் என் தம்பியார்  எலியை அடிக்கிறேன் என்று   தரை ஓட்டை அடித்து  உடைத்து அவன் அடி வாங்கினது தான் மிச்சம்  எலியோ  தப்பி ஓடி விட்டது .   இனி விஷம் வைத்து கொல்லாம் என்றால் அதன் நாற்றம் வீட்டை விட்டு விலக பல நாட்கள் ஆகும்.  விஷம் வைப்பது சொன்னால் எலி காதுக்கு கேட்டு விடும் என்பதால் இரு செவி அறியாது எலிப்பொறியில் சுட்ட தேங்காய் துண்டை இரவு வைத்து விடுவார்கள் அம்மா . பெரிய எலி என்றால் தேங்காயை தின்று விட்டு ஓடி இருக்கும். ஏப்ப சாப்ப குட்டி எலிகள் தான் மாட்டியிருக்கும்அதை லாவகமாக சாக்கில் போட்டு அடித்து கொல்வது தான் எங்கள் கடை பையனுகளின் வீரச்செயல்!   எனக்கு எலி கண்ணை கண்டால் இரக்கம் பொத்து கொண்டு வரும் ஆனால் ஒரு முறை எங்கள் வீட்டு அலக்கு இயந்திரத்தின் குழாயை கடித்து சேதப்படுத்திய போது அத்துடன் என் கோபம் ஆரம்பம் ஆகியதுபெருச்சாளி கறி ரொம்ப சுவை என்று சுட்டு தின்னவர்கள் சொல்லியுள்ளார்கள்.  குற்றாலத்தில் குரங்கு நடப்பது போல் எங்கள் வண்டிபெரியாரில், இரைவில் பெருச்சாளி ரோடு வழி ஓடி நடக்கும்எலி வீட்டிற்க்குள் வந்து விட்டது என்றாலே பின்பு எங்களுக்கு கிலி தான்.

இதே மாதிரி ஒரு தொல்லை எலிகள் தான் தமிழக அரசியலில் இருக்கும் தமிழ் இன உணர்வாளர்கள்!   தமிழன்  என்றால் யார் தான் இவர்கள் பார்வையில்? அதற்க்கு என்ன தகுதி வேண்டும் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டுமா? அல்லது தமிழ் மொழியில் தான் பேச வேண்டுமா? அல்லது ஈழத்தில் பிறக்க வேண்டுமா?

 நம்மூர் இன உணர்வாளர்களுக்கு தமிழர்கள் என்றால் ஈழ தமிழர்கள் மட்டும் தான்!  அவர்களுக்கு ஒன்று என்றால் அறிக்கை விடுவார்கள் அரசியல் விளையாட்டு விளையாடுவார்கள்.  ஆனால் இது எல்லாம் அவர்கள் மேல் உள்ள பாசமா என்றால் அது தான் இல்லை.  ஒன்று அரசியல் வியாபாரம் அடுத்தது பெண்கள் 7 நாட்களில், முகம் வெளுக்க பெfயர் லவ்லி தேய்ப்பது  போல் தன்னை இன உணர்வாளன் என்று நிலை நிறுத்துவது வழியாக அரசியலிலும் கொள்ளையிட  ஒரு குறுக்கு வழி மட்டுமே.  

ஈழ தமிழர்கள் அறிவிலும் எழுத்திலும், தன்மான உணர்விலும், மொழி பற்றிலும் பல தமிழக தமிழர்களை விட சிறந்தவர்களே. சமீபத்தில் பிரான்ஸில் இருந்து வந்த என் ஈழ நண்பர் குடும்பத்துடன் உணவகம் சென்றிருந்தோம். எந்த ஊர் என்று கேட்டவர்களிடம் அவர் இலங்கை என்று சொல்வதை தான் காண இயன்றது.  பிரான்ஸில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் கூட தமிழில் நன்றாக கதைக்கின்றனர். அவர்கள் முகநூல், வலைப்பதிவு பக்கங்கள் எல்லாம் தமிழ் மொழியை பாவிப்பதையே விரும்புகின்றார்கள். நம் நிலை என்ன; சென்னை எப்போதோ பறங்கி தேசம் ஆகி விட்டது, இனி மதுரை, நெல்லை, கோயம்ப்த்தூர் என அதன் பிடியில் அகப்படும் நாள் வெகு அருகில் தான் உள்ளது.  ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்; ஆசிரியை அழகான ஆங்கில உச்சரிப்புடன் ஒரு வெள்ளைகாரியை விட அழகாக ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார்.  எவ்வளவு திறைமையான மொழி ஆற்றல் என்று மனதில் நினைத்து கொண்டிருந்தேன்.  ஒரு தமிழ் பாட்டுடன் நடனம், என்றதை அவர் இவ்வாறு  "அடுத்து வருவது 'நல்ல நல்ல  பில்லைகளை நம்பி'…..” நொந்து விட்டேன்.  இதுவே எல்லா நிகழ்ச்சியிலும் இங்கு காண்பது தான்.  “டமில் டாய் வால்த்து, குற்றுவிலக்கு” இதெல்லாம் இங்கு அறிவாளிகளின் லட்சணம்.  தமிழகத்தை பிடித்துள்ள ஒரு நோய்!   நாங்கள் கேரளாவில் 75 வருடம் முன்பு குடியேறினோம் அங்கு நான் கண்ட தமிழ் ஆவல் இங்கு இருப்பது போல் தெரியவில்லை.  சிறப்பாக சென்னையில் தமிழில் கதைத்து விட்டால் ரொம்ப கேவலைமான பார்வை நம்மை திரும்பி பார்க்கும்.   இந்த நோய் நம்மை விட ஆங்கிலம்  கதைக்கும் மலையாளிகளிடம் கண்டதில்லை.

ஈழ தமிழர்கள் கெட்ட நேரம்! போருக்கு முன்பு ஏதோ உங்கள் உதவியை நாடியிருப்பார்கள் அதற்க்கு தான் 3 லட்சத்திற்க்கு  மேலான  மக்கள் மரணத்திற்க்கும்,  50 ஆயிரத்திற்க்கும் அதிகம் பெண்கள் விதைவை ஆவதற்க்கும், அவர்கள் இருந்த நினையை விட மிக மோசமாக ஆடு மாடுகள் போன்று முள் வேலிக்குள் முடக்கப்படுவதற்க்கும் உதவி செய்துள்ளீகள்.   தலீவா நாங்க உங்க பின்னால் உண்டு என உசுபேற்றி விட்டு தலைவர் பிராபகரன் வீட்டில் புலி வளர்க்கிறார் அப்படி இப்படி என்று பத்திரிக்கைகளில் கொடுத்து விளம்பரம் தேடி  தன் அரசியல் வாழ்க்கையை வளப்படுத்தினர் இந்த இன உணர்வாளர்கள்.   மே 2009  நாளில் இங்கு நடந்தது தான் என்ன?; அங்கு மக்கள் போரில் உயிர் விட்டு கொண்டிருந்த போது எல்லா ஊடகவும் பாடல் ஆட்டத்தில் இருந்த்து.  அதைக்கூட வசதியாக  மறந்து விடுவோம், போர் மூண்ட போது முத்துகுமார் என்பவர் என் உடலை ஆயுதமாக்குங்கள் என கூறி ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தார். அந்த நிகழ்வை பற்றி இயக்குனர் ராமின் கட்டுரை படிக்கும் போது  வெள்ளையன் என்ற வியாபாரிக்கு,  படம் பிடிக்கும் இயக்குர்களுக்கு  மற்றும் சாதாரண மக்களுக்கு இருந்த  இன பாசம், பற்று கூட தலைவர்களுக்கு இல்லை என்று புரிந்து போய் விட்டது.  மக்களுக்கு  புரிந்ததாலே ஓய்வெடுத்து கொள்ளுங்கள்  என வீட்டுக்கும் அனுப்பி விட்டார்கள்.  

ஆனால் இப்போது இந்த பெருச்சாளி,  சுண்டெலி, பன்றி எலி,  நச்செலி எல்லாம் சேர்ந்து ஆட்டம் ஆட ஆரம்பித்து விட்டது.  நெல்லையில் ஒரே சுவரொட்டிகள் தான் தமிழகத்தை தமிழ் இனத்தை காப்பாற்ற போகிறார்களாம்.  இது எல்லாமே நாடகம் என்று மக்கள் புரிந்துள்ளதை, இவர்கள் எப்போது புரிய போகிறர்கள்ன் என்று தான் பார்க்க வேண்டியுள்ளது.

ஈழத்தில் இருந்து உலகநாடுகள் அனைத்திலும் குடிபெயர்ந்துள்ள ஈழ தமிழர்கள் அவர்கள் பிரச்ச்னைக்கான காத்திரமாக குரல் கொடுத்து கொண்டு இருக்கும் போது இவர்கள் அறிவு சாராது, உணர்ச்சி வேகத்தால் ஊளை இடுவதால் அவர்கள் குரலும்  நசுக்கப் படத்தான் போகின்றது.   ஈழ மண்ணின் பிரட்சனைகளுக்கு உண்மையாக தோள் கொடுபவர்களாக இருந்தால் போரால் வாழ்க்கை இழந்த பெண்களுக்கு வாழ்க்கைக்கு வழி சொல்லவோ அல்லது அங்கு அனாதமாக்கப்பட்ட குழந்தைகளுக்கு தத்து எடுக்கவோ, அவர்கள் அரசியல் பிரச்சனையை உணர்ச்சி வேகத்தில் எடுக்காது, உண்மையான மனித நேயத்துடன்  கதைக்க முன் வருவார்கள்.  நம் மண்ணில் அகதியாக தஞ்சம் அடைந்த ஈழ மக்களின்  கதி தான் என்ன?  நாம் இன்று நினைத்தால் நமது தமிழகத்திலிலுள்ள அகதி முகாமில் சென்று எளிதில் அவர்களை சந்திக்க  இயலுமா?  அல்லது அவர்களையும் நம் சமூக ஓட்டத்தில் இணைத்து  விட்டோமா? இலங்கை தமிழன் என்ற பாகுபாடுதான் அவர்களுக்கு இங்கும். ஏதோ தேற்வு நேரம் தலைவர்கள் அவர்களை சந்தித்து சிரித்து கதைக்கின்றனர்.

ஈழ மக்கள் உரிமைக்கு தன் உயிரை கொடுத்து போராடும் குழுக்கள் முகநூலிலும் உண்டு நானும் நட்பு வைத்திருந்தேன்சமீபத்தில் ஒரு ஈழ சகோதருக்கு படிப்பு வாய்ப்பு அறிய வினவினார்நல்ல பதில், கெட்ட பதில் என்றில்லை எந்த ஒரு பதிலும் வரவில்லை.…

ஈழ தமிழர்களை விட ஆதரவில்லாத அடையாளமில்லாத தமிழக தமிழர்கள் உண்டு அவர்களுக்கு என இந்த இன உணர்வாளர்கள் என்றாவது குரல் கொடுத்துள்ளார்களா? குழந்தைகளை பிச்சை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்படும் எத்தனையோ பெற்றோர்கள், ஆதரவு இல்லாத  சூழலால் தெருவில் தள்ளப்பட்ட பெண்கள், முதியவர்கள், குறைந்த பட்சம் குடியிருக்க ஒரு வீடு, இரவு சாப்பாட்டுக்கு வழி இல்லாத பல கோடி மக்கள், பன்னாட்டு அடிமைகள் ஆக்கப்படும் நம் இளைஞசர்கள், வானளவில் உயர்ந்த விலை ஏற்றம்,  இதை எல்லாம் இன உணர்வாளர்கள் அறிய  நாம் ஈழத்தில் தான் பிறக்க வேண்டுமோ?

இது மட்டுமா பிரட்ச்சனை சமச்சீர் கல்வி என்ற பெயரில் கல்வி மறுக்கப்படும் பள்ளி  மாணவர்கள்தண்ணீர்மணல்,  கல்குவாரி என்ற பெயரில் இயற்க்கை சுரண்டலுகள், மக்கள் உயிரை குடிக்கும் அணு உலைகளின் நிறுவல்கள், எங்கு பார்த்தாலும் நாற்றம் பிடித்த தெருவுகள், சுகாதாரமற்ற  பேருந்து நிலையங்கள், லஞ்சம் வாங்கும் அரசு அலுவலங்கள், கொள்ளையடிக்கப் படும் தனியார் ஊழியர்கள், பெண்கள் நலம் பாதிப்பு என எண்ணில் அடைங்காதவை.

சமீபத்தில்  தமிழகம் வந்த சிங்களர்களை அடித்து தங்கள் வீரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்போரை முன் நின்று நடத்தியவர்களிடம் சீட்டுக்கு என கைகட்டி வாய்கட்டி நின்ற உணர்வாளர்களூக்கு சாதாரண மக்களை கண்டவுடன் எப்படி வீரம் பொத்துகிட்டு வருகின்றது என்று தான் தெரியவில்லை. ஈழப்போர் அமெரிக்க -ரஷியா ; இந்தியா-சீன என்று மாறிவிட்ட சூழலில் உணர்ச்சி பேச்சுக்கு விடை கொடுத்து  ராஜபக்சேவின் மனித உரிமை மீறல் பற்றி ஐநாவில்  கொண்டு சென்று, அவர்கள் சொந்த மண்ணில் தன்மானமாக வாழ சாதகமான சூழல் உருவாக்கி கொடுப்பது தான் காலச் சிறந்தது. வன்னி மக்கள் இன்றும் முள்கம்பிக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இன்னும் பல ஆயிரம் ஈழப் போராளிகள் நிலை என்ன என்பதே தெரியவில்லை. உண்மையை சொன்னால் ஒரு ஈழ தமிழர்களுக்கும் இன உணர்வாளர்கள் மேல்  கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.  

இனியாவது இன உணர்வாளர்கள், தாங்கள் ஊதி கெடுத்த சங்கை உடைக்காது  விட்டால் மிஞ்சிய கொஞ்சம்  உயிர் வாழ இயலும்!

13 comments:

  1. வணக்கம் சகோதரி,
    எலித் தொல்லைக்குத் தீர்வாக எலிப் பொறி வழங்கும் திட்டம், வரவேற்கப்பட வேண்டியது.

    ஈழ உணர்வாளர்கள்- தாம் வாழ ஈழ மக்கள் உணர்வினை வைத்துப் பிழைக்கும் நபர்கள். இவர்களைப் பற்றி பேச்செடுத்தாலே கோபம் தான் வரும்.

    ReplyDelete
  2. றுக் பதிவு Josephine ...இப்பதான் என் சகோதரி Josephine இடம் பேசிவிட்டு வருகிறேன்...இந்த எலித்தொல்லை எல்லா இடங்களிலும் உண்டு போல...சிலருக்கு உணர்வுகள் இருக்கவே இருக்காது...சிலருக்கு பழகிப்போய் இல்லாமல் போகலாம்..சிலர் வேண்டுமென்றே வெளிக்காண்பிக்க மாட்டார்...இது மூன்றாவது நிலை போல...

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு.........

    ReplyDelete
  4. அய்யன்பேட்டை தனசேகரன்August 20, 2011 9:49 pm

    இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்து விட்டால் வதை படப் போவது பாதிப்பின் விளிம்பிலுள்ள தமிழர்களும் அங்குள்ள உழைப்பாளி மக்களுமேயாவர். மேல்தட்டு மக்கள் என்றும் போலவே சுகமுடன் வாழ்வர். இங்குள்ள தமிழ் மக்களை ஒன்றிணைத்து மத்திய அரசின் மூலம் ராஜபக்ஷே அரசுக்கு ஒருமித்த நடைமுறை சாத்தியமுள்ள வலுவான கோரிக்கைகளை வென்றெடுப்பதன் மூலமே முள்வேலிகளில் அடைபட்டு கிடப்பவர்களை நிம்மதி மூச்சு விடச்செய்ய முடியும். அதை விடுத்து இங்கு வரும் சிங்களவர்களை உதைத்து துவைத்தால் அங்கு சென்றதும் வெறி கொண்ட மிருகங்களாக தமிழர்களை தாக்குவதையும் வதை செய்வதையுமே நெடுங் கதைகளாக தொடர இயலும்.

    ReplyDelete
  5. நன்றாக பிரச்சினையை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளாய், மகளே. சமூகப் பிரச்சினைகளில் தனி மனிதனின் பங்கு என்ன என்பதைப் பற்றி எனக்கு ஒரு தெளிவு இன்னும் வரவில்லை.

    தனி மனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொதுப் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்களா என்பது எனக்கு ஒரு கேள்விக்குறியாகவே தெரிகிறது.

    ReplyDelete
  6. நல்ல பதிவு ..ஈழத் தமிழ் தலைவர்களே தமக்கு இப்ப என்ன தேவை என்பதை ஒற்றுமையாக சொல்லவில்லை ..ஈழத்திலும் ,புலம் பெயர் நாடுகளிலும் ஒரு கூட்டம் மக்களை ஏமாற்றுகிறது தலைவர் இருக்கிறார் , உயிருடன் வருவார் என்று ..அதில் ஒரு பிரிவு இந்தியாவின் ஏமாற்றுக் காரர்களுடன் கூட்டு வைத்துள்ளது..
    ஒரு கொசுறு :
    அதில் ஒரு பிரிவு தமிழ் படம் தயாரிக்குதாம் .. 13 வய்துச் சிறுமியை பல இர்ரணுவத்தினர் கெடுப்பது தானாம் கதை... தமிழர்களுக்கு உது தெரியாதா ? ஆங்கிலத்தில் எடுத்து , மற்று நாடுகளுக்கல்லவா இவற்றை உண்மையைச் சொல்ல வேண்டும். தமிழர்களை உணர்வூட்டி இன்னும் பணம் சம்பாதிக்க ஒரு வழி தமிழ்ப் பட்த் தயாரிப்பு ... அதை நோர்வே தமிழர்கள் ஒரு குழு தான் தயாரிக்கிறார்கள் ...

    ReplyDelete
  7. நல்ல விரிவான பதிவு.

    ReplyDelete
  8. >> உண்மையை சொன்னால் ஒரு ஈழ தமிழர்களுக்கும் இன உணர்வாளர்கள் மேல் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.

    good abservation

    ReplyDelete
  9. தமிழ் இனவுணர்வு: சாமானிய தமிழருக்கு கஷ்டங்களை மறப்பதற்கு இலகுவில் கிடைக்கும் போதைவஸ்து.

    ReplyDelete
  10. நல்ல பதிவு மட்டுமில்லை உண்மையும் கூட

    ReplyDelete
  11. இந்த பதிவு இன உணர்வாளர்கள் என்று சொல்லி திரிபவர்களுக்கு ஒரு சாட்டை அடி.

    இன உணர்வாளர்கள் என்று சொல்லி திரிபவர்கள் பலர் தங்களை பிரபல படுத்தி தாங்கள் இலாபம் சம்பாதிக்க முனைபவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களால் நாட்டுக்கு கிடைக்கும் நன்மையை விட உபத்திரவம்தான் அதிகம்.

    ஆனால் ஆதரவு அற்றவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்யும் பலர் இன்னமும் இருக்கிறார்கள். என்ன அவர்கள் தாங்கள் உதவிகளை விளம்பர படுத்துவதில்லை என்பதால் யாருக்கும் அவர்களை தெரிவதில்லை.

    ReplyDelete
  12. wt we have to do for these god's children sister....

    ReplyDelete