6 Apr 2012

இன்று துக்க வெள்ளி!

யேசு தாஸ் பாடிய உருக்கமான பாடல்  துக்க வெள்ளி, பெரிய வெள்ளி என்று எப்படி அழைத்தாலும் இன்று ரொம்ப துக்கமான நாள் ஏன் என்றால் இன்று தான் யேசு கிருஸ்துவை தூக்கில் ஏற்றி கொன்றார்கள்.  இதை நினைவு கூறும் விதமாக யேசுவின் கடைசி நேர நிகழ்வுகளை நினைத்து கொண்டு கிருஸ்துவுடன் காகுல்த்தா மலை ஏறுவது போல் நினைத்து கொண்டு மலை ஏற ஆரம்பித்து விடுவோம்.  கேரளா மலை பிரதேசம் என்பதால்  இன்றைய நாள் பிரார்த்தனைக்கு என்றே மலையில் கூடி விடுவார்கள். அதி காலை ஆரம்பிக்கும் பவனி மதியம் 11 மணியுடன் உச்சியில் சென்று சேரும். எங்கள் பகுதியில் கிருஸ்தவர்கள் என்றில்லை விரும்பிய எல்லோரும் வேண்டுதலுடன் கலந்து கொள்வர்.

          தமிழ் சிலுவை பாதை பாடல்! இஸ்லாமிய இந்து வியாபாரிகள் நடந்து செல்பவர்களுக்கு குடி தண்ணீர் சர்பத் கொடுக்கும் வழமை உண்டு.  சில கெட்ட எண்ணம் கொண்ட நபர்கள் வெள்ளி அன்று நடந்து போகும் வழி எல்லாம் குப்பையும் கொட்டியிருப்பார்கள். 

சிறப்பாக 14 கிருஸ்து நினைவுகள்!  நிகழ்வுகளை மனதில் முன் நிறுத்தி சிலுவை பாதை ஆரம்பம் ஆகும்.  வறுத்த அரிசி, உப்பு, மிளகு போன்றவை குருசு மலையில் காணிக்கையாக இடுவது உண்டு. சிலர் வேண்டுதல் நிமித்தமாக மலை இறங்கி வருபவர்களுக்கு கஞ்சி கொடுக்கும் வழக்கவும் உண்டு.

இன்று எங்கள் வீட்டில் எல்லோருக்கும் உபவாசம் தான். மதியம் 12 மணிக்கு தான் துவயலுடன் கஞ்சி கிடைக்கும். அப்பா மட்டும் அரை வயற்றுக்கு கஞ்சி குடித்த பின்பு தான் மலை ஏறுவார்.  அப்பாவுக்கு என்ன தான் பக்தி என்றாலும் பட்டிணியை தாங்கும் சக்தி இருந்ததில்லை. 

சிலுவை மரத்தில் யேசு நாதர்! உச்சியில் அன்று பாதிரியார் நடத்தும் சொற்பொழிவு முடிந்ததும் வீடு வந்து சேர்ந்ததும் சிறு தூக்கம் முடித்து 3 மணி பிரார்த்தனைக்கு சென்று விடுவதே பழக்கமாக இருந்தது.  3 மணிக்கு தான் யேசு நாதர் உயிர் பிரிந்தது என்பதால் உருக்கமான ஜெபம் நடை பெறும். கோயில் மணி அன்றுடன் நிறுத்தப்பட்டு ஈஸ்டர் அன்றே மறுபடியும் கேட்கும் படியாக ஆசரிக்கின்றனர்.


4 comments:

  1. ஜெருசலத்தில் இயேசுவை சிலுவையில் ஏற்றக் கொண்டு சென்ற பாதையில் சென்றிருக்கிறேன். ஒரு கைடு வழி நெடுகிலும் அந்த கதைகளைச் சொல்லிக்கொண்டே வந்தார். மனது மிகவும் உருகியது. அது ஒரு வினோத அனுபவம்.

    அதேபோல் பெத்தலேமில் கிறிஸ்து பிறந்த இடம் என்று ஒரு மாட்டுக் கொட்டிலையும் பார்த்து உணர்ச்சி வசப்பட்டேன்.

    ReplyDelete
  2. யேசு சிலுவையில் அரையப்பட்டார் என்பது உன்மையாக இருந்தாலும் அவர் சிலுவையில் இருந்து இறக்கவில்லை என்பதுதான் உண்மை.

    இதனை நான் வெறும் விமர்சனத்துக்காக மட்டும் சொல்லவில்லை.

    ReplyDelete
  3. Karuna Karan · Govt Arts College, Nandanam, ChennaiMay 23, 2012 10:36 pm

    UNGAL VARNNAI NANGALUM KOODA VANDADU POL ULLADU.

    ReplyDelete
  4. N.Rathna Vel · Top Commenter · G.S.H.H.SCHOOL, SRIVILLIPUTTUR. · 218 subscribersMay 23, 2012 10:36 pm

    அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete