ஒவ்வொரு கதையும் வாழ்க்கையின் அனுபவ பாடங்கள். நோகாமல் நொங்கு உண்டது போல வாசிப்பவர்களுக்கு அனுபவங்களைத் தாமே பெற்றது போன்ற உணர்வைத் தருகிறது. 'ஒற்றை மரம்' மனதை ஆழ ஊடுருவி அந்தச் சிறுவனை தழுவி சோகத்தைப் போக்கவேண்டும் என்ற தவிப்பையும்,'என் தோட்டம் சொல்லும் கதை' நகைச் சுவையாக மனித மனங்களை உணரவும், 'என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம்' நாம் வாழ்வில் சந்திக்கும் சில மனிதர்களின் மன ஓட்டத்தையும் அதன் பயங்கர விளைவையும் உணர்த்துகின்றன.
எங்கள் இருவருக்கும் நேரில் சந்திக்க வேண்டும் என ஆற்வம் இருந்தாலும் எவ்வகையில் சாத்தியம் ஆகும் என சந்தேகங்கள் இருந்ததை ஊண்மையாக்கியவர் சுபி அக்காள். சுபி அக்காவும் தன் அன்பு கணவர் நரேன் அண்ணாவுடன் நெல்லை வர நாங்களும் குடும்பத்துடன் வரவேற்று நெல்லை சுற்றுலா தலங்களை சுற்றி வந்த நாட்கள் வாழ்வில் மறக்க இயலாத நாட்கள். பிரியும் நேரம் மிகவும் கனத்த மனதுடன் கண்ணில் முட்டி வந்த கண்ணீர் துளிகளுடன் விடைபெறும் கணங்களாக இருந்தாலும் உடன் பிறந்த சகோதரியை கண்டு கொண்ட ஒரு மகிழ்வில் பிரியா விடைபெற்றோம். அடுத்த விடுமுறையில் சந்திக்கும் நாட்களை எண்ணி காத்திருக்கின்றோம். எங்கள் அன்பை புரிந்து சந்திக்க ஒரு வாய்ப்பு உருவாக்கி தந்த நரேன் அண்ணாவுக்கும் என் கணவருக்கும் எங்கள் நன்றியை செலுத்த கடமைப்பட்டுள்ளேன்.
அக்காவிடம் இருந்து புத்தகம் பற்றிய கருத்து பெருவதில் பெருமிதம் கொள்கின்றேன் மகிழ்கின்றேன். அக்கா அமைதியில் அரசியாக, எளிமையின் நிறைகுடமாக பல அறிய குணநலன்களை கற்பித்து சென்றுள்ளார். தன் தனித்துவமான ஆளுமையினால் அன்பினால் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த அக்காவின் அன்பு தங்கையாக பாக்கியம் பெற்றதில் நான் உண்மையிலே நெகிழ்கின்றேன். ஆயுசின் கடைசி மட்டும் அக்காவின் அன்பில் அன்பு தங்கையாக வாழ பிரார்த்தித்து கொண்டு அன்புடன் உங்கள் ஜோஸ் .......அக்கா!