8 Mar 2013

பெண்மையை போற்றுவோம்!



பைபிளில் ஒரு சுவாரசிய கதை உண்டு. கடவுள் மனிதனை மண்ணில்  இருந்து படைத்த பின்பு, தன் மூச்சு காற்றை நிரப்பி அவனுக்கு உயிரை கொடுப்பார். ஆண் தனியாக இருப்பதை கண்டு கலங்கிய கடவுள்,  தனியாக இருப்பது நல்லது இல்லை என்ற புரிதலில் அவனை தூங்க வைத்து அவன் விலா எலும்பை எடுத்து அவனுக்கு ஏற்ற துணையாக பெண்ணை படைப்பார். ஆண் தலையில் இருந்து படைக்காதது ஆண் தலையில் ஏறி அமர்ந்து கொண்டு துன்புறுத்த கூடாது  என்றும்; கால் எலும்பில் இருந்து படைக்காதது ஆண், பெண்ணை தன் காலில் போட்டு மிதிக்காது இருக்க வேண்டும்  என்று தானாம். ஆணின் இதயத்தில் வீற்றிருக்க வேண்டியவளே பெண் என்ற கருத்தினை வலியுறுத்துவதை   இக்கதையில் காண்கின்றோம். ஆம் பெண்மை போற்றுதலுக்குறியது. ஆண்களால் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது. ஆண்மையை பெண்கள் ஆராதித்து ஆதரிப்பது போலவே,  ஆண்களால் பெண்மை போற்றப்பட வேண்டியது அவசியம். ஆனால் ஆதி காலம் முதல் இன்றுவரை ஆண் பெண் உறவு தங்களுக்குள் போட்டியிடுவதும் குற்றம் சாட்டுவதுமாகவே இருந்துள்ளது என்பது சரித்திர வரலாறுகள் சொல்கின்றன.

இன்னொரு கதை நினைவிற்கு வருகின்றது. கடவுள் தான் படைத்த முதல் மனிதர்கள் ஆதம்- ஏவாளிடவும் கூறுவார் 'நீங்கள் ஏதேன் தோட்டத்தில் எந்த பழம் வேண்டுமானாலும் சாப்பிடலாம்; ஒரு பழத்தை மட்டும் உண்ண வேண்டாம்" என்று. கடவுள் ஒன்றும் குறிப்பிட்டு சொல்லாது இருந்தால் கூட சும்மா இருந்திருப்பார்கள் இந்த மனிதர்கள். ஆனால் 'கூடாது' என்றதும் எளிதாக சோதனையில் வீழ்ந்து விடுவார்கள். கடவுள் தவறை கண்டு பிடித்து கேள்வி கேட்கும் போது ஆண் கடவுளிடம் கூறுவார் நீங்கள் துணைக்கு தந்த இந்த பெண் தான் என்னை தவறாக நடத்தி விட்டாள் என்று.  

ஆண்-பெண் உளைவியலை ஆழமாக பரிசோதித்தால் எந்த நிலையிலும் ஒரே போல் சிந்திக்க இயலாதவர்கள். பெண் இரக்கம் அன்பு பாசம் போன்ற உணர்வுகளால் தூண்டப்படும் போது ஆண்கள் அறிவு, வீரம், கோபம் சார்ந்த நிலைகளில் மட்டுமே சிந்திக்க இயல்கின்றது. இவர்கள் இருவரும் சேரும் போது,  ஒருவர் ஒருவரை நிபந்தனையற்று ஏற்று கொள்ளும் போது, ஒருவர் ஒருவரை தாங்கும் போது, இன்னும் சிறந்த ஒரு புதிய உறவு பிறக்கின்றது. இதில் யார் பெரியவர், யார் சிறந்தவர் என்பதை விட  இருவரும் ஒன்றாக செயலாற்றும் போது ஆக்கபூர்வமாக  மற்றொரு மாற்று சக்தி உருவாகுகின்றது என்பதே உண்மை. ஆணும் பெண்ணும் சமம் என்பதை விட ஆண் பெண் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பவர்கள். ஒருவர் குறையை இன்னொருவர் நிவர்த்தி செய்கின்றவர்கள் என்பதே இயற்கை நியதி.

இன்றைய நிலையில் பெண்கள் பெண்மை போற்றப்படுவது இல்லை என்பதையும் கடந்து மிதித்து நெரித்து உடைக்கப்படுகின்றது. இதற்கு காரணவும் இருபக்கவும் உள்ள புரிதலின் குறைபாடே. இவர்கள் போட்டி மனபாட்மையை இந்த சமூக இயக்கவும், நிறுவனங்களும் தவறாக எடுத்து கொண்டு தங்களுக்கு சாதகமாக பயண்படுத்தி கொள்கின்றது. வரலாற்றை பரிசோதித்தால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட  குறைந்த ஊதியம், அதீத  வேலை நேரம்  இவைக்கு எதிராகவே பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் தற்போதும் பெண்கள் அதே சூழலில் தான் உள்ளனர் என்பது வெட்கப்பட வைக்கின்றது. சில வேலைவாய்ப்பு இடங்களில் ஆண்கள்; வேலை செய்த இடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு பெண்களை புகுத்துகின்றனர். இதனால் பெண்கள் பலன் பெறவில்லை அவர்கள் நிலையில் இருந்து புரக்கணிக்கப்பட்டனர், சுரண்டப்பட்டுகின்றனர். ஒரு ஆணுக்கு கொடுக்கும் அதே ஊழியம் பெண்களுக்கு தரவில்லை ஆனால் இரு பெண்ணை ஒரு ஆண் செய்யும் வேலைக்கு புகுத்த படுகின்றனர். வாழ்கை தரம் உயர்ந்ததா என்றால் வீட்டு படிக்குள் துன்பப்பட பெண்கள் இன்று தெருவுகளில் வேலையிடங்களில் துன்பப்படுகின்றனர்.

பெண்மை என்றதுமே ஆண்மையை எதிர் திசையில் நிற்க வைத்து கேள்வி கேட்கும் சமூக அவலம் நிலவுகின்றது.  இது ஒரு மோசமான வழி காட்டுதல். ஒரு காளை வண்டியின் இருசக்கரம் போல் ஒருமித்து பயணிக்க வேண்டியவர்கள். இங்கு புரிதல்களில் தவறுகள் உள்ளதால்; ஆண்கள் தங்கள் மனநிலையில் இருந்து பெண்களை பார்ப்பதும், பெண்களை தங்களை போன்றே ஆண்களை பார்ப்பதும் அறிவின்மையை   தவிற வேறு ஏதுமில்லை!

பெண்கள் தன்னிறைவு பெற்று விட்டனர் என்பது எல்லாம் வருமானம் பணம், தொழில் சார்ந்த கணக்கு. உண்மையில் பெண்மையில் தரம் தலைமுறைக்கு தலைமுறை கீழ் இறங்குவதையே காண்கின்றோம். ஒரு சூழலை எதிர் கொண்ட யுக்தி, புத்தி, தைரியம், துணிவு பாட்டிக்கு இருந்த அளவு தாய்க்கு இல்லை தாய்க்கு இருக்கும்  மட்டும் மகளுக்கு இல்லை. பெண்களின் தரமான வாழ்கை தேய்ந்து தோய்ந்து வருகின்றது. பெண்மை என்பது பெண் முதலில் தன் பெண்மையை போற்ற முன்வர வேண்டும். அப்போதே அச்சமூகம் போற்றுதலுக்குறிய நிலையில் பெண்மையை வகைப்படுத்தும்.  இன்றைய நிலையில் இருபக்கவும் கோஷங்களும் வேஷங்களூம் அதிகரிப்பதை விடுத்து பெண்மையை போற்றுவதும் இல்லை மதிப்பதும் இல்லை என்பதே உண்மையாகி விட்டது.

பெண்கள் தங்கள் வருமானம், உடை அலங்காரத்தில் முன்னேறுவதை முன்னேற்றமாக காணாது தன் சிந்தனை சக்தியை, தன் ஆக்கபூர்வமாக செயலாக்கத்திலுள்ள வளர்ச்சியை முன்னேற்றமாக காண வேண்டும். பல பெண்கள் தங்கள் ஏமாற்று குணத்தாலும் தங்கள் நயவஞ்சக செயல்களாலும் பெண்மைக்கு மேலும் பங்கம் விளைவிப்பதுடன்,  மோசமான பிம்பமாக சமூகத்தில் தங்கள் தோற்றத்தை நிலைநிறுத்துவது வழியாக பெண் சமுதாய அளவீடுகளுக்கே அவமானம்  வர செய்து விட்டு செல்கின்றனர். இன்றைய வேலையிடங்களில் ஆகட்டும் அரசு நிறுவனங்கள், அரசியலில் ஆகட்டும் ஆண்களுக்கு நிகரான தில்லுமுல்லுக்களில் போட்டியிடுவதை விடுத்து தங்கள்  பெண்மைக்கு இணங்கும் விதம் போற்றும் விதம் நடந்து கொள்கின்றனரா என கேள்வி எழுகின்றது. பெண்கள் பெண்மைக்கு எதிரானது ஆண்களால் ஆன வன்முறை மட்டுமல்ல பெண்களால் நிகழும் வன்முறையும் தான்.

இன்றைய சமூகத்தின் வளர்ச்சிக்கு தரமான பெண்மையில் வளர்ச்சி அவசியம் தேவை. ஒரு சமூகத்தின் ஆக்கவும் அழிவும் பெண் தான். ஒரு சமூகத்தின் மனசாட்சியும் பெண்ணே! கட்டுப்படுத்தும் மூக்கணாம் கயறும் பெண் கையிலே உள்ளது. சில ஆண்கள் தங்கள் வீட்டு பெண்களை தவிர்த்து மற்று அனைத்து பெண்களையும் இகழ்ச்சியாக காண்பதையும் கண்டு வருகின்றோம். ஒரு பெண்ணை இகழும் போது தன் தாயை, தன் சகோதரியை பழிப்பதாக உணர்ந்தாலே பெண்மை தழைக்க  துவங்கி விடும்.  ஒரு தாயின் இரக்கமே மனித குலத்தையே நிலைக்க செய்கின்றது. ஒரு மனைவியின் பாசம் ஒன்றும் இல்லாதவனை கூட வல்வனாக மாற்றுகின்றது. 
பெண் தன் பெண்மையின் கவுரத்தில் பெருமை கொண்டு நெகிழ்வதையும் தன் சக மனிதயான பெண்ணை போற்றுவதில் ஆண்கள் ஆனந்தம் கொள்ளும் காலம் வெகு விரைவில் அமைய வேண்டும்.
(பின் விபரம்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே போல் 24 விலா எலும்புகள் தான் உண்டு)பெண்கள் தின வரலாறு!

3 comments:

  1. உண்மை நடப்புக்கள்...

    எல்லா நாட்களும் சிறப்பான நாட்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  2. திண்டுக்கல் தனபாலன் தங்களுக்கு என் நன்றி வணக்கங்கள் நண்பா.

    ReplyDelete
  3. தினமும் அரைமணி நேரம் என்று உங்களது / மற்றவர்களது / தமிழ்மணத்தை / சார்ந்த இடுக்கைகளை படித்து வருகிறேன். என்னை சுற்றி நடப்பவைகளை கவனிப்பவன் என்ற ஒன்று மட்டுமே இதற்க்கான காரணமாக இருக்கிறதே அன்றி வேறு காரணங்கள் இல்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். காரணம் அறிய விரும்பினால் எனது 2013 மார்ச் மாத இடுக்கையை பார்க்கவும்!

    ReplyDelete