23 Nov 2013

கொலைகாரியாகும் மனைவிகள்!


கடந்த சில மாதங்களாக நாட்களாக தங்கள் கணவரை கொலை செய்யும் மனைவியரின் செய்தியை பத்திரிக்கைகள் வாரி வழங்கி வருகின்றது. இவ்விதம் ஆக்கம் அற்ற செய்திகளை தொடர்ந்து வழங்கி வரும் பத்திரிக்கைகளை ஒரு புறம் குறை கூறினாலும் குற்ற செயல் புரியும் பெண்களில்,  பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மனைவி, பேராசிரியர் மனைவி, கணிணித்துறையில் வேலை செய்வபவர்கள், புதுமண பெண்கள் என எல்லா நிலை பெண்களையும் காண்கின்றோம்.

கல்லானாலும், புல்லானாலும் புருஷன் என கண் கண்ட தெய்வமாக வணங்கி நாதா, ஐயா, அத்தான், மச்சான் என அழைத்து கொஞ்சி மகிழ்ந்து பணிந்து வாழ்ந்த பெண்கள் மனம் வெறுப்பு உணர்வு கொண்டு நிரம்பி கொலை செய்யும் பெண்களாக மாறும் சமூக அவலை நிலையும் எண்ணி பார்க்க வேண்டியுள்ளது.
கூட்டு குடும்பம் உடைக்கப்பட்ட நிலையில் தனி குடும்பங்களும் வேலை போன்ற காரணங்களால் இல்லாதாகி வருகின்றதை காண்கின்றோம்.  தனி மனித உரிமை, சுயசார்பான வாழ்க்கை போன்ற போர்வையில்  சமூக மாற்றம், நாகரீகம் என்ற பெயரில் குடும்பம் என்ற அமைப்பின் தேவையை முக்கியத்தை உணர மறுக்கும் சூழலும் காண்கின்றோம். தற்கால எழுத்திலாகட்டும் இலக்கிய படைப்புகளிலாகட்டும் காணும்  சினிமா, தொலைக்காட்சி சீரியலுகள் வழியாகவும் குடும்பம் என்ற அமைப்பை மிகவும் கொச்சைப்படுத்தி அவையை போர்க்களமாக உருவகப்படுத்துவதில் போட்டி போட்டு கொண்டு ஊடக உலகம் முன் நகர்ந்து கொண்டு இருக்கின்றது. காலாகாலமாக கணவன் –மனைவி ஜோக் என்ற பெயரில் கணவன் மனைவி உறவை கொச்சப்படுத்தும் சூழலும் கண்டு வருகின்றோம். காதல் உறவை புனிதப்படுத்தும் அளவுக்கு கணவன் மனைவி உறவின் புனித தன்மையை எடுத்து கூறாவிடிலும் புறக்கணிப்பது கொடும் வேதனையாகும்.  கணவன் மனைவி தூய காதலை வெளிப்படுத்தும் தினமான காதலர் தினத்தை கூட  காதலர் தினமாக மாற்றியதும் இன்னொரு அவலம். திருமணம் என்ற பந்தத்தை; பெரிய சிந்ததையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களால் கூட பிள்ளை உருவாக்கும் இயந்திர அமைப்பு என்ற பார்வையை கடந்து காண இயலவில்லை. பல புரட்சி கவிஞிகளும் தங்கள் கவித்துவ புலமையை வெளிப்படுத்த திருமணம் என்ற அழகிய உறவை கொச்சப்படுத்தும் வரிகளை தான் எடுத்து கொடுக்கின்றனர்.

 
 தானும் சம்பாதிக்கும் சூழலில் கல்வியறிவு பெற்ற சூழலில் அல்லது தன்னிறவு அடைந்த சூழலில் பெண்கள் ஆண்கள் பாதுகாப்பை பெரிய  அரணாக கருதும் போக்கும் குறைந்து வருகின்றது. பெண்கள், ஆணாதிக்கம் ஆண் அடிமைத்தனம் என்ற கோட்பாடுகளிள் சிக்கி கணவன் என்ற உறவை கண்ணிய பார்வையில் இருந்து விலக்கி பார்க்கவும் ஆரம்பித்து விட்டனர். மேலும் வேலைக்கு என வெளி உலகை சந்திக்கும் பெண்கள் வெளியுலகு ஆண்களுடன் வரம்புக்கு மேல் பழகும் சூழலும் உருவாக்கி கொள்கின்றனர். கள்ள தொடர்பு என்பது பெண்கள் மத்தியிலும் மிகவும் சகஜமாக பரவ ஆரம்பித்து விட்டது. அல்லது பல நபர் உறவை பெரிய ஒரு  ஒழுக்க சிக்கலாக காண்பதும் இல்லை. அல்லது தங்கள் வாழ்வியலுக்கான தங்கள் ஸ்திர தன்மைக்கான ஒரு வழியாகவும் எடுத்து கொள்கின்றனர். பல பெண்கள் இவ்வித உறவுகளில் சிக்கி புகைந்தும் வெளிறியும் அவதூறு பேச்சுகளின் மத்தியில் பழக்கப்பட்டு கொண்டிருக்கும் போது சில பெண்கள் அசுர வேகத்தில் முடிவெடுத்து கொலைகாரிகளாகவும் மாறி விடுகின்றனர்.

6 comments:


  1. நாட்டில் நடப்பதை மிக சரியாகவும் தெளிவாகவும் எடுத்து சொன்ன பதிவு

    ReplyDelete
  2. வருந்தத்தக்க சமூகமாக மாறிவருகிறது

    ReplyDelete
  3. பெரிதும் பேசப்படாத முக்கியமான சமூக அவலத்தை விளக்கியுள்ளமை நன்று. பெண்கள் வன்முறையாளர்களாக காரணம் 1. பாலியல் தேவை 2. பண தேவை. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பல இளம் பெண்கள் கவனிக்கத் தவறி வருகின்றனர். அன்பு, பண்பு, விட்டுகொடுத்தல், சமாளித்தல், எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளல் போன்ற குணாம்சங்கள் பழங்கதைகளாகி விட்டன. அதிகம் சம்பாதிப்பதும், பலரோடு பழகுவதும் உலகையும் தெரிவுகளையும் விரித்துள்ளது. ஒன்றை விட ஒன்று பெட்டர் என்ற எண்ணம் ஓங்கும் பொழுது தமக்கு வாய்க்கப்பட்ட துணைவர், வாழ்க்கை, வேலை போன்றவற்றின் மீதான அக்கறை, முக்கியத்துவம் குறைந்து தாவும் குரங்கு மனம் பெறுகின்றனர். உண்மையில் உலகில் எவையும் சிறந்ததுமல்ல, குறைந்ததுமல்ல என்பதை உணர வேண்டும். அத்தோடு கால நேரம் தவறி உழைக்கும் பான்மை, வருவாய்க்கு மிகுதியான செலவினங்கள் போன்றவைகளால் உட்கார்ந்து அளவளாவி பேசி மகிழும் சூழலற்று போய்விட்டதும் காரணம். ஊடகங்கள் சமூக ஊடகங்களின் பங்கும் உண்டு. இது குறித்து சமூகவியலாளர்கள் ஆய்வுகள் நிகழ்த்துவது காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
  4. தங்கள் அனைவரின் கருத்துக்களுக்கு என் நன்றி மகிழ்ச்சிகள்.

    ReplyDelete