29 Dec 2013

பாவத்தை போக்கும் பாபநாசம் !









பல மாதங்களுக்கு பின்பு ஒரு பயணம். பயணங்கள் நம் மனச்சுமையை நீக்க வல்லது. பாபநாசம் நோக்கிய பயணவும் எப்போதும் போல் மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கிய பயணம் போன்றது தான். பிறந்ததும் வளர்ந்ததும் மேற்கு தொடர்ச்சி மலை என்பதாலோ என்னவோ அடர்ந்த காடுகளும் அதன் ஊடே பாயும் நதிகளும் ஏதோ ஒரு வகையில் குழைந்தைப்பருவத்திற்கு அழைத்து செல்வது போன்ற உணர்வு.  எங்கள் குழந்தைப்பருவத்தில் பாடச்சாலைக்கு செல்வது, விளையாட செல்வது, என எல்லாம் மேற்கு தொடர்ச்சி மலையுடன் கலந்த வாழ்க்கை தான்.


பாபநாசம் திருநெல்வேலியில் இருந்து 30 கிமீ பயணித்தால் பாபநாசம் எட்டலாம். நாகர்கோயிலில் இருந்து என்றால் 100 கிமீ பயணிக்க வேண்டும். சிவ பார்வதி, இந்திரன் போன்ற கடவுளுகளுடன் இணைத்து பல பக்தி கதைகளும் உள்ளது. மருத்துவ குணம் கொண்ட பொதிகை மலையில் இருந்து வரும் வெள்ளம் இங்கு ஓடுவதால் நோய் நிவாரணியாக இத்தலம் பார்க்கப்படுகின்றது. மேலும் வன எல்கை வழி கடந்து சென்றால் 1942-ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சியில் உள்ள பொதிகை மலையில் கட்டப்பட்ட  அணைக்கட்டு,  புலிகள் சரணாலையம், காரையார் வானதீர்த்தம் போன்ற சுற்றுலா தலங்களும் சுற்றி வரலாம்.    மாலை 5.30 க்குல் மலையை விட்டு இறங்க  வீண்டும் என்பதால் காரையார் செல்ல அனுமதிக்க வில்லை காவலர்கள். இருப்பினும் அணைக்கட்டில் மின்சாரம் தயாரிப்பதை  பற்றிய சில தகவல்களை பயணிகளுடன் பகிர்வது கொண்டனர் . படம் எடுக்க தடைசெய்யப்பட்ட பகுதி என்றும் எடுத்துரைத்து படம் பிடிக்க தடுத்தனர்.


சிவபெருமானும் பார்வதி தேவியும் அகஸ்திய முனிவருக்கு காட்சி தந்து அருளிய இடமாக இது கருதப்படுவதால், இது ஒரு புண்ணிய ஸ்தலமாக திகழ்கிறது. இதற்கு மரியாதை செய்யும் விதமாக இங்கே நிறுவப்பட்டதுதான் அகஸ்தியர் கோயில்.

மலையில் இருந்து கீழ் நோக்கி வரும் போது வன மத்தியில் பாவநாச சிவன் கோயில் தெரிகின்றது. வரும் வழி யாவும் செடிகள் அபூர்வ மரங்கள் என காட்சி தரும் மலைக்கு  மஞ்சள் போட்டு வைத்தது போன்று சிவன் கோ யில் ந ம் பார்வைக்கு  தெரிகின்றது. பாண்டிய மன்னன்  விக்ரமசிங்கத்தால் கட்டப்பட்ட ஏழு கோபுரம் கொண்ட கோ யிலாகும் இது. 
பாபா நாசநாதர் கோயில்
பெயர்க்காரணம்: அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை "பாபநாசநாதர்' என்கின்றனர். இத்தலத்திற்கு "இந்திரகீழ க்ஷேத்திரம்' என்ற பெயரும் இருக்கிறது. கட்டுரை

இப்படியாக சிறப்பு பெற்ற கோயிலிலிருந்து ஓடும் நதியை காணும் வண்ணமாக மண்டபம், ஆற்றிவழிபாடு மற்றும் நீராட்டுக்கு என அருகில் செல்ல கலைநயத்துடனான அழகிய படிகட்டுகள் என காலத்தால் அழியாத கட்டிடக்கலையுடன் விளங்கி நிற்கின்றது. தண்ணீரையும் இறைவன் இருப்பிடத்தையும் பிரித்து பார்க்காத தமிழர் மத நம்பிக்கைக்கு எடுத்து காட்டும் விதம் அழகுடன் நிர்மாணித்து வைத்துள்ள ஆலய வளாகம் தற்காலம் வியாபார தளமாகவும்,  அடிப்படை பண்பாட்டை மறந்த மக்களின்  ஆசாரம், நம்பிக்கை மட்டும் சார்ந்து இருப்பதால்  தூய்மையாக பராமரிக்கும் தேவையை உணராது உள்ளது துயரை தருகின்றது.

நீராடி விட்டு உடைமாற்ற  என வைத்திருக்கும் கட்டிடம் பயணற்று இருப்பதால் பெண்கள் நடுவழிகளில் நின்று தான் தங்கள் உடைய மாற்ற வேண்டியுள்ளது. மக்கள் கூடும் இது போன்ற சிறப்பிடங்களில் சோப்பு போன்றவை பயண்படுத்தி விட்டு பாறைகளில் அப்படியே வைத்து விட்டு செல்வதும் சமூக அக்கறையற்ற செயல் மட்டுமல்ல இயற்கை ரசிக்கும் நோக்கத்துடன் ஆற்றில் ஆர்வத்துடன் இறங்கும் மக்கள் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கும் செயலுமாகு்ம்.   
 எல்லா சிந்தனை மத்தியிலும் மறுபடியும் நதியை நோக்கிய போது மனது சுமை நீங்கி அமைதி தளும்புவதை உணர்கின்றோம். ஒரு போதும் வற்றாத நதி தன் புண்ணிய தன்மையை வாரி வழங்கி கொண்டு எந்த பிரதிபலனும் எதிர் பார்க்காது காலத்தை மறந்து ஓடி கொண்டிருக்கின்றது

இயந்திர தன்மையான வாழ்க்கை சூழலில் சிக்கி கொண்டிருக்கும் இக்காலயளவில் இயற்கையின் கொடையான இவ்வித இடங்களை சுத்தமாகவும் தூய்மையாகவும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாக உள்ளது. இத்தளங்கள் மத அடையாளங்களையும் கடநது  நம் பண்பாட்டை உலகம் ஒட்டும் எடுத்து செல்லும் அடையாளங்களாகவும் திகழ்கின்றது என்பதையும் நாம் எண்ணி பார்க்க வேண்டியுள்ளது. பண்பாட்டு தளங்களை சுத்தமற்ற வகையில் கையாளும் பொறுப்பற்ற சமூகமாக  மாறும் அவலம்  வருத்ததிற்குரியது . 

6 Dec 2013

திருமணம் என்ற பிச்சைத்தொழில் !

இன்று ஒரு திருமண விருந்துக்கு சென்று வந்தோம். மிகவும் தெரிந்த குடும்பம். பெண் பார்த்த படலம் முடிந்த அன்றிலிருந்து  பெண்ணுக்கு பிடித்த துணி மணிகள் நகைநட்டு என எடுக்க ஆரம்பித்து விட்டனர் பெண் வீட்டினர். பெண்க்கும் ஆசை கொஞ்சம் நஞ்சமல்ல சுடிதார் கயிறு வைத்து தைத்தது, கட்ட சுடி, நெட்டை பைஜாமா, என்று 20 க்கு மேல் கறந்து  விட்டது. இனி விருந்து பட்டு முகூர்த்த பட்டு, சாந்தி முகூர்த்த பட்டு என ஐந்துக்கும் மேல் பட்டு சேலைகள்! 50 பவனுக்கும் மேல் நகை!

மாப்பிள்ளை வீட்டார் முகத்தில் இன்று காலையோ எந்த தெளிவும் இல்லை. பலகாரம் கொண்டு வந்த கூடை பத்தவில்லை என்கின்றனர், பெண் போட்டு இருக்கும் மாலை ஒல்லியாக இருக்கின்றதாம், கம்மல் எடுப்பில்லையாம். முக்கியமாக பெண் வீட்டாரை அன்னியர் போல் நிறுத்தி வைத்திருந்தனர்.

எவ்வளவு கேவலமான மனநிலை! வாங்குவது வரதட்சணை என்ற பெயரில் பிச்சை. இந்த தலைக்கனம் தேவையா? மற்று இனமக்களில் இல்லாத கொடிய மனம் நம்மிடம் காணப்படுகின்றது. மனிதனை மனிதனாக மதிக்காத அகராதி குணம். கேரளாவில் திருமணம் பெண் வீட்டில் என்றால், நிச்சயம் ஆண் வீடு என்றதாக தான் இருக்கும். திருமணம் அன்று பெண்- மாப்பிள்ளை தான் நட்சத்திரமாக ஜொலிப்பார்கள். ஆனால் இங்கு காணும் திருமணங்களில் ஆண் வீட்டாரில்  பல்லு போன கொள்ளு தாத்தா வரை கேள்வி கேட்டு கொண்டு, பெண் வீட்டை கேவலப்படுத்தி கொண்டு வலம் வருவார். மாப்பிள்ளை ஒன்றும் தெரியாதை பிள்ளை போன்று மணபந்தலில் வீற்றிருப்பார். பல பிரச்சினை கஷ்டங்கள் மத்தியில் பணம் புரட்டி பெண்ணை மண பந்தலில் எட்ட வைக்கும் தகப்பன், உடன் பிறந்த சகோதரரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவு நடந்து கொள்ளும் நாளாக திருமண நாளை மாற்றி விடுவார்கள். பெண் முதல் பிரசம் முடித்து போகும் வரையிலுள்ள  எல்லா பண்டிகையும் இனி பணம் புரட்டும் திருவிழாவாகத்தான் இருக்கும் ஆண் வீட்டாருக்கு!

மணப்பெண் கொண்டு வரும் பணம் அவர்கள் வாழ்க்கைக்கான முதல்!. வயதானவர்களுக்கு இதில் என்ன உள்ளது. இளைஞர்கள் என்று, தங்கள் திருமண வைபவத்திற்கு தங்கள் பெற்றோர்களை விருந்தினர் இடத்தில் நிறுத்தி  சுயசார்பு நிலையில் திருமணம் முடிக்கின்றனரோ அன்றே இத்தகைய கேவலமான வியாபாரம் ஒழியும். இன்று நாகர்கோயில் போன்ற இடங்களில் பெண் எடுக்க பலர் முந்தி கொண்டு ஓடுவதும் தேடுவதும் கோடி கிடைக்கும் என்ற கேடி ஆசையில் தான்!  பெற்றோர்கள் பல வகைகளில் கடன்கள் வாங்கி திருமணம் முடித்து கொடுத்து விட்டு மீதி வாழ்நாளில் கடன்காரர்களாகவே உழலுகின்றனர். பெண்களும் தங்கள் நகை, உடை பேராசையை களைந்து தகப்பன் வீட்டில் இருந்து கொண்டு போகும் வரதட்சிணையை வங்கி மூலதனமாக கொண்டு போங்கள். இதுவே உங்கள் அடுத்த சந்ததியினருக்கும் பாதுகாப்பும் நலனாகவும் இருக்கும். நகை உடை ஆசையை காட்டி பெண்களை அடிமையாக்குவதும் இல்லாமல்; பெண்ணை பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும் கேவலப்படுத்துவதற்கு பெண்களே காரணம் ஆகக்கூடாது. வாழ்க்கையில் ஒரு இக்கட்டான சூழல் வரும் போது இந்த முறை கூறி பணம் பறிப்பவர்கள் அருகில் இருக்க மாட்டார்கள். தங்களுக்கு கிடைக்கும் பணத்தை வங்கி கணக்காக மாற்றி விட்டால் சாஸ்த்திரம் சம்பிரதாயம்,முறை என்ற பெயரில் அனாவசியமாக செலவழியும் பண விரளத்தை தடுக்க்லாம். ஒரு தகப்பனார் திருமணம் முடிந்து நிகழும் இரவு "சுருள்" நிகழ்ச்சியில் இனி என்னிடம் ஒன்று மில்லை என உடுத்தியிருந்து வேட்டியை உருவி கட்டியது இன்றும் கண்ணில் தண்ணீர் வர வைக்கின்றது.

ஒரு மணிநேரத்திற்கு ஒரு பெண் வரதட்சணை பிரச்சினையால் மரணிக்கின்றனர். வரதட்சணை தடைச்சட்டம் 1961 லும் எந்த பிரயோசனவும் இல்லை. ஆண் என்றால் வரவு பெண் என்றால் செலவு என்று பலர் நினைப்பதால்  பெண் குழந்தைகளை கருவிலே அழிக்கும் வழக்கவும் இங்கு நிகழ்வாக மாறி விட்டது. இந்தியாவில் மட்டுமே 40 மிலியன் பெண் குழந்தைகள் கருவிலே கொல்லப்பட்டதாக செய்திகள் சொல்கின்றன.  



 
திருமணம் என்பது சொர்கத்தில் என்பதை விட பணத்தில் என்பது தான் உண்மையாகி வருகின்றது. இன்று பல பெற்றோர்கள் திருமணம் என்ற பந்தம் ஊடாக பெற்ற/கொடுத்த பணத்தை பெருமையாக சொல்லி கொள்கின்றனர். ஒரு மகனை வளர்த்து அவன் கட்டும் தாலியில்  இருந்து கல்யாணச் செலவு வரை பெண் வீட்டில் வசூல் செய்யும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களே உங்களுக்கு என்ன மரியாதை உண்டு உங்கள் மருமகள் பார்வையில்?

1 Dec 2013

தேஜ் தருண்பாலின் ஊடகவியலும் பாலியல் வன்முறையும்!




இந்தியாவில் வளர்ச்சி வறுமையில் வாடும் மக்கள் வழியோர பிச்சைக்காரர்கள் படும் துன்பம், கல்வி பெற இயலாத மக்கள் என எந்த செய்தியிலும் இல்லாத முக்கியத்துவம் பாலியல் கதைகளுக்கு கொடுத்து வருவது  பாலியல் சிந்தனையிலுள்ள வறச்சி, கேடு கெட்ட மனித சிந்தனையை காட்டுகிறது. தற்போது தெஹல்கா பத்திரிக்கையின் உரிமையாளர் எதிர்கொள்ளும் பிரச்சினையும் இதை சார்ந்தது தான்.  


தேஜ் தருண் கற்பழித்தாரா அல்லது பாலியல் வன்முறையில் ஏற்பட்டாரா அல்லது இரு நபர் விருப்பத்துடன் நடந்ததா என்பது இன்னும் வெளிவரவில்லை. கற்பழிப்பு என்ற வார்த்தையில் நின்ற பெண் என் உடலை அவமதித்துள்ளார் என்று மொழி மாற்றியுள்ளார். பெண்ணியவாதிகள் கம்யூனிஸ்ட் தலைவி என பலர் குரல் எழுப்பியுள்ளனர். இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது போலும்; தருண் தான் முதல் குற்றவாளி போல் சித்தரிகரிப்பது தான் கேலியான விடையம். குஸ்வந்த் சிங் தன் பத்திர்க்கை அனுபவத்தில் பெண்களுடன் இருந்த தொடர்பை பற்றி புத்தகமாகவே வெளியிட்டுள்ளார். Kushwanth Singh ஊடக உலகில் பத்திரிக்கை என்றில்லை  தொலைக்காட்சி, சினிமா, கல்வி நிறுவனங்கள் அரசு தனியார் நிறுவங்கள் என செக்ஸ் குற்றங்கள், எல்லை மீறல்கள் மலிந்து கிடக்கின்றது. 

இதில் ஆண்களை மட்டும் குற்றம் சாரவும் இயலாது. பெண்களும் விரும்பி செல்வதையும் கண்டு வருகின்றோம். கற்பழிப்பு, பெண் உடலை கேவலப்படுத்துவது என்பது காலம் காலமாக கடந்து வரும்  நிகழ்ச்சியாக தான் உள்ளது. இன்று பெண்களும் ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் வேலை பார்க்கின்றனர். பாலியல் சீண்டாடுதல், வன்முறையை  எதிர் கொள்ளாத பெண்களே இல்லை என்ற நிலை தான் இன்று உள்ளது. ஒரே ஒரு நாள் திடீர் என யாரும் கடத்தி கொண்டு போய் கற்பழிப்பதில்லை. செக்ஸ் பேச்சு, ஊர் சுற்றல் பரிசு பொருட்கள் கொடுக்கல் வாங்கல் என, பல நிலைகளை கடந்து பெண்களை வசியப்படுத்தி தங்கள் பிடியில் கொண்டு வர முயல்கின்றனர். ஆணின் முதல் முயற்சியை தடுக்கும் பெண்ணால்; தன்னை அடிமைப்படாது காத்து கொள்ள இயல்கின்றது. ஆனால், அத்தகய பெண்கள் சந்திக்க வேண்டிய பல சவால்கள்  உள்ளன. தவறு செய்யாதே பல குற்றங்களை கூறி அச்சுறுத்த முயல்வர். வேலைப்பழுவை அதிகரிக்க செய்வார்கள், அவதூறு கதைகள் பரப்பி விடுவார்கள். இந்த சவால்களை யாவும்  எதிர்கொள்ள பல பெண்கள் மெனக்கெடுவதில்லை. “கொஞ்சம் அனுசரித்து போவது” வழியாக தங்கள் நிலையை சமரசப்படுத்தி கொள்கின்றனர். ஒரு அலுவலகத்தில் தன் மேல் அதிகாரிக்கு நெருங்கிய தோழியாக கள்ள காதலியாகவோ மாறுவது வழியாக பல பெண்கள், தாங்கள் வேலை செய்யாது உயர் பதவியில் எட்டவும் உடன் பணிசெய்பவர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகின்றனர். தாங்கள் நினைத்த பணி உயர்வும், ஊதியம்,அல்லது பல அனுகூல வசதிகள் பெற்று சுகமாக வாழ்கின்றனர். பல பெண்கள் தங்கள் அதிகாரிக்கு நெருங்கியவராக இருப்பதில் பெருமை கொள்கின்றனர். இதில் எழுத்தாளர்கள், அதிகாரத்தில் இருக்கும் நபர்களுடன் நெருக்கம் வைப்பதில் போட்டியே நடக்கின்றது. இந்த நிலை எல்லா வேலையிடங்களிலும் காணலாம்.  ஆனால் தன்னை  போல் இன்னொரு பெண் போட்டிக்கு வந்து சேரும் போது வருத்ததிற்குள்ளாகுகின்றனர் தங்களுக்கு கிடைக்கும் வசதிகள் குறைக்கப்படும் போது கொந்தளித்து நீதி சிந்தனையில் நியாயம் தேடி சமூகத்தை அணுகுகின்றனர். 


ஆனால் உண்மையாக பாதிக்கப்படும் பெண்கள் ஒரு போது வெளியில் வராத வண்ணம் அவர்கள் அபிமான உள்ளம் அவர்களை வதைக்கின்றது. அப்படியாக நீதி கேட்டு வந்த பெண்கள் நீதி கிடைத்து போனதாகவும் சரித்திரம் இல்லை. அவ்வகையில் 30 வருடத்திற்கு மேலாக  மரண படுக்கையில்  கிடைக்கும் அருணா Aruna என்ற செவியிலருக்கு கிடைத்த நியாயம் நாம் கண்டதே. "கற்பழிப்பை தடுக்க இயலாவிடில் மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்ள வேண்டும்" என்ற சொன்ன நீதிபதிகள் வாழும் நாடல்லவா நம்முடையது. rape victim  பெண்கள் விடையத்தில் பல தலைவர்கள்  நடந்து கொண்ட விதம் அறிந்ததே. Gang-rape-victim-suzette-jordanசூப்பர் டூப்பர் ஸ்டார் என்று சொல்லி திரிந்த பல நடிகர்கள் பெண்கள் விடையத்தில் வில்லன்களாகத்தான் இருந்துள்ளனர்.

பெருவாரியான பெண்கள் எளிதாக அடிமையாக மாறுவதால் பெண்கள் என்றாலே தான் நினைக்கும் எதையும் செய்து விடலாம் என பல ஆண்கள் கணக்கு போட்டு விடுகின்றனர். பெரும்வாரியான கார்ப்பரேற்றுகள், கல்வி இடங்களில் இப்பிரச்சினை தலை விரித்து ஆடுகின்றது. இன்று “நான் உனக்கு வேலை தந்தால் எனக்கு நீ என்ன தருவாய்” என்று துணிவாக கேட்கும் பல ஆண்களையும் கண்கூடா கண்டு வருகின்றோம்.


வேலையிடங்களில் பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பான இடைவெளியை ஏற்படுத்த தவறி விடுகின்றனர். உடன் வேலை செய்யும் ஆணை முதலில் புகழ்வது, எப்போதும் அருகில் இருந்து அரட்டையடிப்பது, இரட்டை அர்த்ததில் பேசுவது, தங்கள் வீட்டு படுக்கை அறைக்குள்ளும் அழைத்து மரியாதை செலுத்துவது, அவர்கள் பணத்தில் சாப்பிடுவது என ராஜபோகமாக இருந்து விட்டு திடீர் என்று கெடுக்க வருகிறான் என்றால் என்ன சொல்வது? வேலையிடவும், தனி நபர் வாழ்க்கையும் இரு தளங்களாக இருக்க வேண்டும். உடன் பணி செய்யும் ஆணோ பெண்ணோ தேவைக்கு அதிகமாக சகவாசம் வைத்து எல்லா விடையங்களும் பகிர்வது/பேசுவது தங்கள் கன்னியமான வாழ்க்கைக்கு பங்கம் வரவைக்கவே செய்யும். இன்று பல பெண்கள் வேலை உத்தரவாதம் பாதுகாப்பு சுயநலம் கருதி ஆண்களுக்கு எடுபிடியாக இருக்க தயங்குவதில்லை. பிரச்சினை என்று வரும் போது தங்களை பாதுகாத்து கொண்டு தப்பிக்க துணிகின்றனர்.

gender equality cartoons, gender equality cartoon, funny, gender equality picture, gender equality pictures, gender equality image, gender equality images, gender equality illustration, gender equality illustrations  பத்திரிக்கைத்துறை என்றில்லை காவல், கல்வி, அரசு அலுவலகம் என குடும்பங்களுக்கு வெளியிலுள்ள உறவுகள் மலிந்து கிடக்கின்றது. இதன் தாக்கம் அவர்கள் குடும்பம் தனி நபர் வாழ்க்கை சார்ந்தது. அதை நிர்ணயம் செய்யவேண்டியது இத்தகைய நபர்களும் அவர்கள் குடும்ப உறவுகளுமே. தருண் என்ற பத்திரிக்கையாளருக்கும் அவர் உதவியாளருக்கும் பாலியல் பேச்சு இருந்துள்ளது, உறவு இருந்தாலும் இது எந்த வகையிலும் அவர் மேற்கொண்ட பத்திரிக்கை தொழிலுடன் இணைத்து அவர் குடும்பம் அவர் நிறுவனம் என எல்லாம் நடுத்தெருவில் கொண்டு வருவது எவ்வகையில் நியாயமாகும். இளம் பத்திரிக்கையாளரை கடத்தி கொண்டு போனதாகவோ தெரியவில்லை. இந்த இளம் பத்திரிக்கையாளர் இனியுள்ள வாழ்க்கையில் வேலையில் ஜொலிக்கவோ அல்லது அவருக்கு என ஒரு வாழ்க்கை அமைத்து கொள்வது பெரும் சவாலாக இருக்கும். பல பத்திரிக்கையாளர்களின் பலவீனம் கண்டு அவர்களை எலியை பொறிவைத்து சிக்குள்ள வைத்து பத்திரிக்கையின் ஜனநாயக நாட்டிலுள்ள உரிமையை கேலிக்குள்ளாக்குவது வருத்தற்குரியது.


தருண் என்ற பத்திரிக்கையாளர்அரசியலில் நடந்த பல ஊழல்களை தன்னுடைய  எழுத்தால் வெளி கொண்டு வந்துள்ளார். ராணுவம், குஜராத்தில் நடந்த கலவரம், என  பல பிரச்சினைகளை சட்டத்தின் முன் கொண்டு வந்துள்ளார் என்ற காரணத்தால் அவர் தனிப்பட்ட உறவை வெளிச்சம் போட்டு காட்டி அவமதிப்பதில் எந்த சமூக நல்லெண்ணவும் இருக்க இயலாது.

பெண்களுக்கு பாதுகாப்பு  அரசு, காவல், நிறுவனகளால் தர இயலாது. தங்களை முதலில் பெண்கள் நம்ப வேண்டும், தங்களை சிறப்பாக தங்களை மதிக்க வேண்டும். இதற்க்கு தேவை சுய நம்பிக்கை, உண்மை,கவுரவம்!