22 Apr 2018

குழந்தை பாலியல் வல்லுறவு கொலையும் பீடோபிலியாக்களும்!


குழந்தைகள்  மீது வரும் செக்ஸ் மோகத்திற்கு பீடோபிலியா என்று பெயர்.  13 வயதிற்கு உட்பட்ட பருவ வயது எட்டுவதற்கு  முன் உள்ள குழந்தைகள் மேல் பாலியல் இச்சை கொள்ளும் மனநிலையாகும் பீடோபிலியா.

இந்நோயின் காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, சில வேளைகளில் ஒரே  குடும்ப  உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இதே குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக கண்டு பிடிக்கப்பட்டாலும் இது குடும்ப பாரம்பரிய நோயா ஜீன்களால் வருவதா என கண்டு பிடிக்கவில்லை. ஆனால் சில மன மருத்துவர்கள் இது நோயல்ல, இது சுய இன்பம், ஓரினை சேர்க்கை, போற்று ஓர் பழக்க வழக்கம் என்று கூறுகின்றனர். இந்த நோய் தேர்ந்தெடுக்கப்படுவதோ அல்லது கற்று தேர்வதோ அல்ல இயல்பாக சில மனிதர்களில் காணப்படுவது தான் என உளவியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்,.  பீடோபிலியா  என்பதை ஒரு விகல்பமான செக்ஸு விருப்பமாகவே நோக்க உள்ளது

இந்த நோயாளிகளை குணப்படுத்துவது மிகவும் கடினம்.  எதனால் ப்படியான மனநிலைக்கு எட்டுகின்றனர் என்பதை பற்றி இன்னும் சரியான ஆய்வு வரவில்லை.. இந்த நோயின் தாக்கம் 16 வயது முதல் ஒரு மனிதன் அறிந்து கொள்ள இயலும். தனக்கு இது போன்ற நோய் தாக்கியுள்ளது என றிந்ததும் சிகித்சைக்காக உளவிய மருத்துவர்களை அணுகுவதில்லை. ஆனால் இவர்கள் இரைகளை தேடி அலைய ஆரம்பிக்கின்றனர் .

10, 11 வயது பெண்குழந்தைகள் 11, 12  ஆண்குழந்தைகள் இந்நோயாளிகளின் இலக்காக உள்ளனர்.  இந்த நபர்கள் கோரமானவர்களாகவோ அச்சம் கொள்ளும் தோற்றத்திலோ தெரிய மாட்டார்கள். மிகவும் நட்பாக குழந்தைகளிடம் பழகும், குழந்தைகளை எளிதாக வசியப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

இவ்விதமான நோயாளிகள் பல பொழுதும் வெளியாட்களாக இருக்க வேண்டிய அவசியவுமில்லை. 82 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்படுவது சொந்த குடும்ப உறுப்பினர்களால் தான். சில பொழுது சொந்த தகப்பன், தாய் மாமா, தாத்தா சித்தப்பா போன்றவர்களாகவும் இருக்கும் வாய்ப்பு உண்டு.   சில வேளைகளில்  பள்ளி வாகன ஓட்டுனர்கள், ஆசிரியர்கள், மதக்குருக்கள் போன்றவர்களும் குழந்தைகளை எளிதாக பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்குகின்றனர். 
. 
38 வயதான சுனில் ரஸ்டோங்கி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் என ஐந்து குழந்தைகளின் ந்தை ஆவான்.  கடந்த 10 வருடமாக ஈனச்செயலில் தன்னை ஈடு படுத்தி வந்துள்ளான். இவனை ண்டதும் குழந்தைகள் தங்களை மறந்து இவனை பின் தொடர்வதும் அதில் ஒரு குழந்தையை தேர்வு செய்து துண்புறுத்தலில் ஈடுபடுத்துவதை வழக்கமாக வைத்துள்ளான். இதே குற்றத்திற்கு 2006 ல் கைது செய்யப்பட்டு ஆறு மாதம்  சிறை தண்டனை பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது. 500 குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக விசாரணையில் ஒத்து கொண்டுள்ளான்.


இந்தியாவில் கடந்த
ஐந்து வருடமாக குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் 151% அதிகரித்துள்ளது. போக்சோ Prevention of Sexual Offences Against Children (POCSO) Act சட்டத்தின் கீழ்  8904 வழக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும் பாலியல் வல்லுரவு வழக்குகள் 277% அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. 2009 ல் 5484 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் 2014  ஆம் ஆண்டு 13, 766 வழக்குகள் பதிவாகியுள்ளது கவனிக்கப்பட வேண்டியது.
  
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, சுற்றுலா விசா கொடுக்கும் போது அவதானிக்க வேண்டிய முக்கியத்துவத்தை குறித்தும் குறிப்பிடுகின்றார்.

இங்கு சுற்றுலா வருபவர்களில் விபரங்களை இந்தியா அரசு சரியாக விசாரிப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றார். இவருடைய கருத்துக்கு வலு சேர்ப்பது போல் பல வெளிநாட்டு பயணிகளால் குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்து நாம் செய்தியின் வாயிலாக தெரிந்ததே.

ரிச்சாட்டு ஹக்கில் என்பன் பிரிட்டன் பிரஜை.  குழந்தைகள் வன்புணர்வு குற்றத்திற்கு மலேஷியா அரசால் தண்டனை பெறப்பட்டவன். இவன்  பங்கலூரில் இருந்த, 2013 ல் அனாதை குழந்தைகள் காப்பகத்திரற்கு (New Hope for Children Orphanage) உதவி செய்வது போல் அங்கு தங்கியிருந்திருக்கிறான். இவனை பற்றி விசாரித்த போது மலேஷியா அனாத ஆசிரமத்தில் இருந்து குழந்தையை திருமணம் செய்ய முயன்து கண்டு பிடிக்கப்பட்டது.  மிகவும் மோசமான பீடோபிலியா நோயாளியாக இருந்துள்ளான்.  
2014 ல்  ஹக்கிள் இங்கிலாந்து போலிசால் கைது செய்யப்பட்ட போது ஆறு மாத குழந்தை துவங்கி 12 வயது வரையுள்ள குழந்தைகளில் 14 பேரை பாலியல் வல்லுறவு உள்பட  200  க்கு மேற்பட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டான் என பி. பி. சி செய்தி வெளியிட்டது.

பன்னாட்டு நிறுவனத்தில் வேலை நோக்கி வந்த 53- வயதான முரே டென்னீஸ் வார்ட் என்ற வெளிநாட்டு நபர்; பார்வையற்ற குழந்தைகளை துன்புறுத்தினார் என்று டெல்லி போலிஸ் கைது செய்தனர். இந்த நபர் கடந்த 8 வருடமாக குழந்தை காப்பகத்திற்கு வருகை தந்த நபராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு நபர்கள் இந்திய சட்டத்தின் தண்டனையில் இருந்து எளிதாக தப்பித்து  தங்கள் நாட்டிர்கு சென்று விடுகின்றனர்.
  
மோடி, காஷ்மீர் குழந்தை வண்புணர்வு கொலையை பற்றி குறிப்பிடும் போது து கற்பழிப்பு கொலை!  அரசியல் ஆக்காதீர்கள் என கூறியுள்ளார்.  இந்தியாவில் செக்ஸ் மன நோயாளிகள் பெருக காரம் என்ன என்று வினவ வேண்டியுள்ளது.. குற்றம் நிகழ்ந்ததும் கொலையாளியை தூக்கிலிட வேண்டும் என பொங்கும் மக்கள்,ஆண்களில் 10 % பேர் இந்த மன நோயுடன் உலவுகின்றனர் என்பதை அறிவது இல்லை. வயது வரம்பில்லை படிப்பு பாரம்பரியம் பதவி, மதம் இனம் வயது  விதி விலக்கல்ல. இது போன்ற நோயின் பிடியிலுள்ளோர் தானாக ஒத்து கொண்டு சிகித்சைக்கு முன் வர மாட்டார்கள். இவர்கள்  எவ்விதம் ஏனும் ண்டு பிடித்து உரிய  மருத்துவ, உளவியல் மன பயிற்சிகள்  கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இவர்களை ண்டு மருத்துவ உதவி தர அரசு என்ன செய்து வருகின்றது.

இந்தியாவை பொறுத்த வரை ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள்  ஆகும். உலக ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு குழந்தை இந்திய குழந்தையாக உள்ளது. அதே போன்று அதிக குழந்தை வன்முறை நடக்கும் தேசமாகவும் இந்தியா இருந்து வருகின்றது. போஸ்கோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் உத்தர் பிரேதேஷ் முதல் இடத்திலும் மேற்கு வங்கம் அடுத்த இடத்திலும் நமது தமிழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது

தேசத்தில் குழந்தைகளின் நலம் காப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். பல வழக்குகள் ஊடகம் கண்டு கொள்வதே இல்லை. மிகவும் மோசமாகன கூட்டு வல்லுறவு மட்டுமே வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனர், ஒரு குற்றம் நடந்ததும் சூடான விவாதங்களுடன் மீடியா தன் வேலையை முடித்து கொள்கின்றது. தீர்க்கமான முடிவிற்கு குழந்தை நலனுக்கான தீர்வை எட்டுகின்றதா என்றால் இல்லை என்பதே உண்மை.

மீடியாவால், சினிமா பார்ப்பதால் என்று குறுகிய நோக்குடன் இதன் காரணத்தை சுருக்கி விட இயலாது. வெளிநாடுகளில்  இந்த குற்றவாளிகளின் குடும்ப பின்னனி, எதனால் இப்படியான குற்ற செயல்கள் புரிகின்றனர் என்பதை கண்டு பிடித்து தேவையான மருத்துவம் கொடுக்க முயல்கின்றனர். அந்த ஆராய்ச்சி வரும் தலைமுறைக்கும் விழிப்புணர்வு பெற உதவியாக இருக்கின்றது .
  
ஆஸ்தேரிலியாவில் தான் பெற்ற நாலாவது பெண் குழந்தையை 10 வயதில் இருந்தே  பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய தந்தை, 15வயதில் இருந்து அவளை வீட்டின் அடியில் உள்ள அறையில் பூட்டி வைத்து ஏழு குழந்தைகளுக்கு தாயாக்கியுள்ளான். விசாரித்த போது இந்த நபர் தனது குழந்தைப்பருவத்தில் தாயின் கடும் ண்டிப்பில், சுந்தந்திரம் இல்லாது அச்சுறுத்தலில் வளர்க்கப்பட்டவன் என கண்டுபிடிக்கப்பட்டது. தான்  பெற்ற குழந்தையை அடிமையாக நடத்தி  இன்பத்தை பெற்று  வண்மத்தை தீர்த்துள்ளான்..

பெண் குழந்தைகள் பிறப்புறப்பில் ஏற்படும் காயங்களை வழக்கு பதிவு செய்ய எடுத்துக்கொள்ளப்படுகின்றது.  அதே போல் ஆண் குழந்தைகளுக்கு மலத்துவாரத்தில் ஏற்படும் காயங்களும் கணக்கிலெடுத்து வழக்கை பதிவு செய்கின்றனர் . 86% குற்றவாளிகள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிசிடிவி காமரா மூலம் கண்காணிக்க வேண்டும்  என்ற  பரவலான கருத்து எழும் வேளையில் வீட்டினுள் நடக்கும் குற்றங்களை கண்டு பிடிக்க எந்த கருவியாலும் இயலாது என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. அதனால் இந்த விடையத்தில் சட்டத்தை விட மனித மனங்களிலுள்ள மிருக தன்மை, விகார எண்ணங்கள் மாற வேண்டும்

ஒரு பீடோலியா நோயாளியால் முழுமையாக பாலியல் விருப்பத்தில் இருந்து வெளிவர இயலாது.  ஆனால் சில பயிற்சிகள் ஊடாக  பாலியல் குற்றம் புரியும் மனநிலையில் இருந்து தன்னை கட்டுப்படுத்தி தன்னை தற்காத்து கொள்ள கற்று கொடுக்கலாம். இந்த நோயாளிகளை கண்டு பிடிப்பது எப்படி என்ற பெரிய கேள்வி எழுகின்றது.

இந்தியாவில் 50%  குழந்தைகள் பாலியலாக துன்புறுத்தப்படுகின்றார்கள் பாதிக்கப்படும் குழந்தைகளில் 52% பேர் ஆண் குழந்தைகள்  என்றால் பீடோபீலியா  நோயால்  பாதிப்படைந்தவர்கள் அதிகமானோர் இருக்கின்றார்கள்  என்று  தான் பொருள்  கொள்ள வேண்டும். பெரும் வாரியோனோர் ஆண்களாக இருந்தால் கூட இதில் 4% பெண் பீடோபிலியோக்களும் உண்டு என்பதை தரவுகள் உறுதி செய்கின்றன.


இது போன்ற மனநோயில் இருக்கும் நபர்கள் பல வழிகளை கையாளுகின்றனர். ஒரு குழந்தையில் தாய் மாமா வாரக்கணக்காக பாலியல் படங்கள், காணொளிகளை காண்பித்து பெரியவர்கள் இப்படி தான் அன்பு கொள்வார்கள்,  இது சாதாரணம் என மனதில் பதிய வைத்து குழந்தையை பாலியல் செயலுக்கு உட்படுத்தி உள்ளான்.
  
கவனிப்பாரற்று தனிமையில் விடப்படும் குழந்தைகள் தான் எளிதாக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்குழந்தை பாலியல் காணொளிகளை காணும் நபர்களிடம் எச்சரிக்கை ணர்வுடன் இருப்பது,  குழந்தைகளை அணுக விடாது  இருப்பதும் முன்னெச்சரிக்கையாகும். üகுழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பற்றிய போதிய விழிப்புணர்வு கொடுப்பது அவசியமாகும். தொடக்கூடாத இடங்கள் பற்றி குழந்தைகளுக்கு புரிதல் இல்லாதும் ஒரு காரணமே. கெட்ட தொடுதல் நல்ல தொடுதல் பற்றி குழந்தைகளுக்கு பெற்றோர் எடுத்து கூற வேண்டும்ü  தற்காலம் குழந்தை வளர்ப்பில் பெரும் பிரச்சினை என்பது பெற்றோர் இருவரும்  இருவரும் வேலைக்கு போவதும், வீட்டில் பெரியோர்கள் இருந்து கவனிக்கும் சூழலும் இல்லாததும்  குழந்தைகள்  குற்றவாளிகளுக்கு எளிதாக இலக்காகி விடும் சூழல் எழுகின்றது.. யாரிடமும் சொல்லக்கூடாது ரகசியமான  பரிசு,  எனக்கூறி என்று சிலர் குழந்தைகளை துன்புறுத்துகின்றனர். ஆணாதிக்கமான இச்சமூகத்தில் ஆண் குழந்தைகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதை அவமானம் என எண்ணி மறைத்து விடுகின்றனர்மேலும் ஆண் குழந்தைகள் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவதை பற்றிய போதிய விழிப்புணர்வும் இல்லை.

மக்களை சிறப்பாக குழந்தைகளை காக்க,  ஆளும் அரசில் பங்கு என்ன?

 நிர்பயா நிதி என்று ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியது. அதன் கீழ் 3000 கோடி நிதி ஒதுக்கப்பட்ட்து. இந்த நிதிக்கு வல்லுறவுக்கு ஆளான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, உளவியல் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை, பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்த, பொது போக்குவரத்தில் கண்காணிப்பு கேமராக்கள், காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க இந்த நிதியை பயன்படுத்தும் நோக்கில் கோடி ரூபாய் வீதம் 3000 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது . ஆனால் இந்த பணத்தை எந்த மாநிலைத்திற்கும் வழங்கவில்லை அதன் காரணத்தை உச்ச நீதி மன்றவும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
ü   
ü இத்துடன் வர்மா குழு பரிந்துரையான பாலின சமத்துவம் குறித்த பாடங்களை கல்வி திட்டத்தில் சேர்ப்பது, பாதிப்புக்குள்ளான பெண்களின் வழக்கு விசாரணைக்கு உதவுவது, பாதிக்கப்பட்ட பெண்களிடம் காவல்துறை அணுகுமுறை அனைத்திலும் சீர்திருத்தம் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த்து, ஆனால்  கேரளா தெலுங்கான மாநிலங்களை தவிர எந்த மாநிலைங்களிலும் எந்த முயர்சியும் எடுக்க வில்லை.
ü   
ü  அது மட்டுமல்லாது, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில் ஒருங்கிணைந்த பெண்கள் பாதுகாப்பு திட்டத்தை அமைக்கவும்  உத்தரவிட்டது என எதுவும் நடைமுறைக்கு  வரவில்லை,.

ü  குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை கிடைப்பதும் வழக்கை விரைந்து முடிப்பது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குவது என எதுவுமே நடக்கவில்லை, எல்லாம் ஏட்டு கதையாக முடிந்து விட்டது.

ü  இன்னும் ஒரு ஆச்சரியமான விடையம் 3 ஆண்டில், பெண் முதல்வர் ஆட்சி  செய்த மாநிலத்தில் இது வரை நிர்பயா நிதியை கேட்டு பெற வில்லை என்பதாகும்.

குற்றம் நிகழும் வரை காத்திருக்காது குற்றவாளியை இனம் கண்டு பிடிப்பது அவர்களுக்கு தேவையான சிகித்சை அளிப்பதும் மக்கள் அரசின் கடமையாகும். சமீபத்தில் நெதர்லான்று நிறுவனம் இவ்வகையான நோயாளிகளை கண்டு பிடிக்க ஒரு நுட்பமான  வழியை கையாண்டுள்ளது.

பீடோபிலியா நோய்

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு அமைப்பினர் பீடோபிலியா நோயில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் நோக்குடன் கம்யூட்டர் சிறுமி மூலம் வலை விரித்தனர்.  கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சிறுமி உருவத்துடன் உறவு கொள்ளவும், வெப் காம் மூலம் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடவும் 10 வாரத்துக்குள்ளாகவே 71 நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்டோர் அணுகியுள்ளர்


இந்த 20,000 பேரில் பலர் குழந்தைகளுக்குத் தந்தைகளாக உள்ளவர்கள்.அதில் அட்லாண்டாவைச் சேர்ந்த இரு குழந்தைகளுக்குத் தந்தையான  35 வயது நபர், ஸ்வீட்டி உடையைக் கழற்றுவதைப் பார்த்து ரசிக்க 10 டாலர் தருவதாக கூறியுள்ளார்.

சிறுமியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் வக்கிரப்புத்தி கொண்டவர்கள் வரிசையில் பெரும் பணக்காரர்கள், இசைக் கலைஞர்கள் உள்பட சமூகத்தின் சகல தரப்பினரும் இடம் பெற்றிருப்பது வருத்தமும், அதிர்ச்சியும் அளிப்பதுமாக உள்ளதாகவும் சான்ட்பிரிங் கூறினார்.

இந்தியாவைச் சேர்ந்தவர்களும் இந்த பட்டியலில் நிறையவே இடம் பெற்றுள்ளனராம்



1 comment:

  1. I think that is one of the such a lot significant info for me.
    And i'm satisfied reading your article. However should
    remark on few common issues, The site style is perfect, the
    articles is actually excellent : D. Good task, cheers

    ReplyDelete